கமலுடன் சேர்ந்து நடிக்காத 5 முக்கிய நடிகர்கள்… 220 படங்களை கடந்தும் நடிக்காமல் மறைந்த சின்னக்கலைவாணர்…

By Divya

Updated on:

சினிமாவில் ஒரு சில நடிகர்களோடு ஒரு முறையேனும் நடித்தே ஆக வேண்டும் என ஒரு ஆசை அனைத்து நடிகர்களுக்கும் இருக்கும். அப்படியான ஒரு நடிகர் உலக நாயகன் கமல்ஹாசன். ஆனால் அப்படியான் ஒரு நடிகருடன் பல ஹீரோயின்கள் நடிக்க பயப்படுவர். ஏனெனில் அவரது படங்களில் ஹீரோயினுடனான நெருக்கமான காட்சிகள் அதிகம் இடம்பெறும். அதே நேரம் அவருக்கு ஈடு கொடுத்து நடிக்க வேண்டும் என்றால் அதற்கான மெனக்கெடலும் அதிகம். கிட்டத்தட்ட 50 வருடங்களுக்கு மேலாக சினிமாவில் நடித்து வரும் அவருடன் பெரும்பாலும் 3 தலைமுறை நடிகர்கள் பலரும் நடித்துள்ளனர்.

அப்படி இருந்தும் கூட 5 மெகா நடிகர்கள் அவருடன் நடிக்காமல் இருந்துள்ளனர். அதில் முதலானவர் நடிகர் ரகுவரன்..

   

ரகுவரன் : 90களின் காலகட்டத்தில் இருந்து தமிழ் சினிமாவில் முக்கியமான வில்லனாக இருந்தவர் நடிகர் ரகுவரன். தனது கதாபாத்திரங்களுக்கு ஏற்றார் போல் குரலையும் மாற்றக் கூடியவர். கமலின் மிகப்பெரிய ஹிட் படமான நாயகன் படத்தில் நாசர் கேரக்டர் ரகுவரன் நடித்திருக்க வேண்டிய ஒன்றுதான். ஆனால் அந்த கேரக்டரில் தனக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை என ரகுவரன் அதை ரிஜெக்ட் செய்து விட்டார். கமல் எவ்வளவோ பேசி பார்த்தும் ரகுவரன் அந்த படத்தில் நடிக்கவில்லை. அதன் பின்னர் இருவரும் இணைந்து ஒரு படத்தில் கூட பணியாற்றாமல் போயிவிட்டனர்.

raghuvaran

விவேக்: நடிகர் கமலஹாசனின் படங்களை கவனித்துப் பார்த்தால் அவர் பெரும்பாலும் காமெடியில் உச்சத்தில் இருப்பவர்களை நடிக்க வைக்க மாட்டார். நகைச்சுவை காட்சிகளில் அவருடைய பங்கே அதிகமாக இருக்க வேண்டும் என்பதால் டெல்லி கணேஷ், வையாபுரி, ரமேஷ் கண்ணா போன்றவர்களுக்கு தான் தன்னுடைய காமெடி படங்களில் வாய்ப்புகள் அதிகமாக கொடுப்பார். இதனால் தான் விவேக் அவர் படங்களில் நடித்ததே இல்லை எனலாம். கிட்டத்தட்ட பல ஆண்டுகளுக்கு பிறகு விவேக்கின் பிரதான ஆசையாக இந்தியன்2 படத்தில் கமலுடன் இணைந்து நடித்தார். அப்படம் வெளியாவதற்கு முன்பே அவர் இறந்து விட்டதால், மீதமான காட்சிகளில் அவரது ஏ.ஐ தொழில்நுட்பத்துடன் அவரை கொண்டு வருவார்களா என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.

EzLlhYlVcBEfbBU

கனகா: தமிழ் சினிமாவில் குறுகிய காலத்திலேயே மிகப்பெரிய இடத்தை அடைந்தவர் கனகா. ரஜினிகாந்த், கார்த்திக், சரத்குமார் உட்பட அப்போதைய முன்னணி ஹீரோக்களுடன் நடித்தவர், கமலுடன் மட்டும் நடிக்கவில்லை. இதற்கான காரணமும், கமல் படங்களில் இடம்பெறும் முத்தக் காட்சிகள் தான் எனக் கூறப்படுகிறது.

kanaga

ரோஜா: 90 களின் காலகட்டத்தில் முன்னணி ஹீரோக்கள் அத்தனை பேருடனும் ஜோடி சேர்ந்தவர் ரோஜா. சூப்பர் ஸ்டாருடன் உழைப்பாளி படத்தில் நடித்திருந்தவர், கமலுடன் ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை. இது குறித்து அவரிடம் கேட்டப்பொழுது, கமல் படங்களில் இருக்கும் அந்த முத்த காட்சியில் நடிக்க எனக்கு விருப்பம் கிடையாது. அதனால் தான் நான் கமல் பட வாய்ப்புகளை ஒத்துக் கொள்வதில்லை என்று தைரியமாக பதில் சொல்லி இருக்கிறார்.

roja

நதியா: ரோஜாவைப் போலவே நடிகை நதியாவும் கமல் படங்களில் நடிப்பதை அறவே தவிர்த்தார். ரஜினிகாந்துடன் ராஜாதி ராஜா படத்தில் நடித்தார். அதுவரையிலும் ரஜினிகாந்துடன் நடிக்கவே மாட்டேன் என உறுதியாக இருந்தவர், பிறகு தனது கோட்பாட்டை தளர்த்தி அவருடன் நடித்தார். ஆனால் கமலுடன் ஒரு படம் கூட நடிக்க மாட்டேன் என மறுத்து விட்டார். அதற்கான காரணமும், கமல் படங்களில் இடம்பெறும் முத்தக் காட்சிகள் தான் எனக் கூறப்படுகிறது.

nadhiya