ஒரு சின்ன பிரச்சனைக்கு இப்படியா…? ஹோட்டல் ஓனர் உள்பட 5 பேர் சுட்டு கொலை… வாடகை தகராறில் நடந்த பயங்கரம்… பரபரப்பு சம்பவம்…!!

Spread the love

அஸ்ஸாம் மாநிலம் குவாஹாட்டியில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில், வாடகை ஒப்பந்தம் தொடர்பான தகராறில் குத்தகைதாரர் ஒருவர் நடத்திய கொடூரத் துப்பாக்கிச் சூட்டில் ஹோட்டல் உரிமையாளர், அவரது மகன் உட்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

குவாஹாட்டி உலூபாரி பகுதியில் அமைந்துள்ள ‘பிலாஸ் இன்’ என்ற ஹோட்டலை, கடந்த 2025 செப்டம்பரில் மாத வாடகையான ரூ.1.8 லட்சத்திற்கு கனகாந்தா கோகோய் என்பவர் 5 ஆண்டுகளுக்குக் குத்தகைக்கு எடுத்துள்ளார். ஹோட்டல் புதுப்பித்தலுக்குப் பிறகு வசதிகள் மற்றும் இடத்தைப் பயன்படுத்துவதில் உரிமையாளருக்கும் குத்தகைதாரருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதுகுறித்துச் சமரசம் பேசுவதற்காக அக்டோபர் 26 அன்று ஹோட்டலில் பேச்சுவார்த்தை கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு முன்பே இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கை கலப்பாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த குத்தகைதாரர் கனகாந்தா கோகோய், தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக சுட்டுத் தள்ளியுள்ளார்.

இந்தக் கொடூரத் தாக்குதலில் ஹோட்டல் உரிமையாளர் ஹெலினா பருவா, அவரது மகன் தேவர்ஷி காஷ்யப், மருமகள் ரினிகா, உறவினர் நாராயண் தாஸ் மற்றும் ஹெலினாவின் சகோதரர் பூதேவ் பருவா ஆகிய 5 பேரும் குண்டுபாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் சத்தியேந்திர பாதக் என்பவரின் தோள்பட்டையில் குண்டு பாய்ந்த நிலையில் அவர் உயிருடன் மீட்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவத்தின் அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள் வெளியாகி நெட்டிசன்களை மிரள வைத்துள்ள நிலையில், கொடூரக் கொலையாளி கனகாந்தா கோகோயைக் கைது செய்த காவல்துறையினர் இணை ஆணையர் அங்குர் ஜெயின் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Devi Ramu

Recent Posts

“என் பொண்ணு கூட பழகுவியா?”… நள்ளிரவில் வீடு புகுந்து வெறிச்செயல்… மகளின் கள்ளக்காதலனை தீர்த்துக்கட்டிய தந்தை… வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்…!!

மனைவியைப் பிரிந்து வாழ்ந்துவந்த ஆட்டோ ஓட்டுநரான ரமேஷ், பாபு என்பவரின் மகளோடு நட்பு பாராட்டி வந்துள்ளார். இந்தத் தொடர்பை பாபு…

2 minutes ago

“பைக்கும் செயினும் தரலையா?”… பெண்ணின் வயிற்றில் எட்டி உதைத்த கணவர்… வரதட்சணை கேட்டு கொடுமை… நள்ளிரவில் நடந்த பயங்கரம்…!!

சம்பல் மாவட்டம் பஹ்ஜோய் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், கூடுதல் வரதட்சணையாக மோட்டார் சைக்கிளும் தங்கச் சங்கிலியும் தராத காரணத்தால் ராதா…

10 minutes ago

“அம்மா நான் எந்த தப்பும் பண்ணல!”… கதறிய மகள்… கருவி சொன்ன பொய்… ஸ்கேன் ரிப்போர்ட்டை பார்த்து கதறி அழுத தாய்… மருத்துவமனையில் உடைந்த மர்மம்…!!

வீட்டில் பரிசோதித்த கர்ப்பப் பரிசோதனை முடிவும் வயிறு பெரிதானதும் ஒரு தாய்க்குத் தன் பதின்ம வயது மகள் மீது தவறான…

16 minutes ago

அதிசயமா? தெய்வத்தின் அவதாரமா?… ஆற்றில் கிடைத்த விசித்திர தாடைக்கல்… சாமி என திரண்டு வணங்கும் மக்கள்… நடந்தது என்ன?…!!

மத்தியப் பிரதேசத்தின் ராய்சென் மாவட்டம், தேவரி வட்டாரத்தில் அமைந்துள்ள படாய் கிராமத்து நர்மதை ஆற்றங்கரையில், விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் மண்ணைத் தோண்டியபோது…

21 minutes ago

வீடு திரும்பாத தந்தை… துப்பாக்கியை காட்டி மிரட்டிய கும்பல்… சகோதரிகளுக்கு நேர்ந்த கொடூரம்… அதிரடி வேட்டையில் சிக்கிய காமுகர்கள்…!!

பீகார் மாநிலம் பாட்னா அருகிலுள்ள பார் பகுதியில் தீபாவளி பண்டிகையன்று இரவு அதிர்ச்சிகரமான குற்றச்சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. வெகுநேரமாகியும் வீடு…

33 minutes ago

பண்ணிட்டேன் வரலையா?!… பில் கேட்டது ஒரு குத்தமா?… சாப்பிட்ட கஸ்டமருக்கு அடியா?… சிறிய வாக்குவாதம்… உணவகத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

புனே அருகேயுள்ள லோனி கல்போர் பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல 'ஜகதம்பா' உணவகத்தில், உணவிற்கான கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தியதை…

41 minutes ago