இனிமேல் தளபதியை இப்படி பார்க்க முடியாது ; மறக்கமுடியாத விஜய்யின் 5 திரைப்படங்கள்

By Deepika on மார்ச் 28, 2024

Spread the love

 

இன்று தளபதி என விஜய் போற்றப்பட்டாலும், பலருக்கும் பிடித்தது இளைய தளபதி விஜய் தான். ஆரம்ப காலத்தில் குடும்ப படங்களாக நடித்து மக்களின் மனதில் இடம்பிடித்தார் விஜய். அண்ணனாக, மகனாக, காதலனாக நடித்த விஜயை நிச்சயம் யாராலும் மறக்க முடியாது. இனிமேல் அப்படி ஒரு விஜய் படத்தை யாரும் பார்க்க முடியாது. அப்படிப்பட்ட மக்கள் விரும்பிய இளைய தளபதியும் 5 படங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.

   

நினைத்தேன் வந்தாய்

   

Ninaithen vandhai

 

1998 ஆம் ஆண்டு செல்வ பாரதி இயக்கத்தில் விஜய், ரம்பா, தேவயானி நடித்த சூப்பர்ஹிட் படம் தான் நினைத்தேன் வந்தாய். கனவில் வந்த பெண்ணே மனைவியாக வர வேண்டும் என நினைக்கும் விஜய் அவளை தேடும் முயற்சியில் இருக்க, அவர் தந்தை வேறு ஒரு பெண்ணை பார்க்கிறார். இறுதியில் கனவில் வந்தவளை காதலித்த விஜய் அந்த பெண், தனக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணின் தங்கை என தெரிய வருகிறது. என்ன ஆனது இதை எப்படி சுமூகமாக கையாண்டார்கள் என்பதே நினைத்தேன் வந்தாய். இந்த விஜயை அவரே நினைத்தாலும் நடிக்க முடியாது என்பது தான் நிதர்சனமான உண்மை.

பிரியமானவளே

Priyamanavale

இயக்குனர் செல்வபாரதி இயக்கத்தில் விஜய் மீண்டும் நடித்த படம் தான் ப்ரியமானவளே. அக்ரீமெண்ட் போட்டு திருமணத்தை நடத்தும் விஜய், திருமண பந்தத்தின் புனிதத்தை புரிந்து கொள்ளும் இந்தப்படம் விஜய் ரசிகர்களின் பேவரைட் என்றே சொல்லலாம். சிம்ரனும் விஜய்யும் போட்டி போட்டு நடித்திருப்பார்கள், இதுபோன்ற படங்கள் இப்போது வருவதில்லை என்பதே உண்மை.

பிரண்ட்ஸ்

Friends

மலையாள இயக்குனர் சித்திக் இயக்கத்தில் விஜய், சூர்யா, தேவயானி நடிப்பில் வெளியான படம் பிரண்ட்ஸ். நடிப்பின் முக்கியத்துவத்தை காட்டும் இந்தப்படம் வெள்ளி விழா கொண்டாடியது வரலாறு. இதில் வரும் வடிவேலுவின் நேசமணி காமெடியை அவ்வளவு எளிதில் யாரும் மறந்துவிட முடியாது. இன்னும் எத்தனை வருடங்கள் ஆனாலும் நேசமணி போல் காமெடி உருவாக்க முடியாது என்பதே உண்மை.

குஷி

Vijay Jyothika in Kushi

எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் விஜய், ஜோதிகா நடித்த குஷி என்றும் எவர்க்ரீன் தான். 24 வருடங்கள் ஆகிவிட்டது, இன்னும் 24 ஆண்டுகள் ஆனாலும் குஷி பிரஸ்ஸாக இருக்கும். சிவா, ஜெனியை யாரும் மறக்க முடியாது, இருவரின் ஈகோவும் படத்தின் ஹைலைட். அந்த காலத்திலே இப்படி ஒரு காதல் படமா என ஆச்சர்யப்படுத்தினார் எஸ்.ஜே.சூர்யா.

வசீகரா

Vaseegara

செல்வ பாரதி இயக்கத்தில் விஜய், சிம்ரன் நடித்த படம் வசீகரா. இந்த விஜய் முற்றிலும் வித்தியாசமாக இருப்பார். ஹேர்ஸ்டைல், கண்ணாடி என ஆளே வித்தியாசமாக இருக்கும் விஜய் இன்றும் ரசிகர்கள் மனதில் பூபதியாக வாழ்கிறார். இந்த விஜய்யை மறுபடியும் பார்க்க முடியாத என ஏங்கும் ரசிகர்கள் தான் ஏராளம்.