அட கொடுமையே.. உரிமையாளர் போட்ட குட்டித் தூக்கம்… கண்ணிமைக்கும் நேரத்தில் 5 கிலோ தங்கம், 12 கிலோ வெள்ளி அவுட்… நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி வீடியோ…!!

By Swetha on ஆனி 20, 2026

Spread the love

சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் ஒரு சிசிடிவி வீடியோவில், நகைக்கடை உரிமையாளர் ஒருவர் தனது கடையிலேயே அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்க, அந்த நேரத்தில் ஒரு திருடன் கடைக்குள் புகுந்து நகைகளை மிக லாவகமாகத் திருடிச் செல்லும் அதிர்ச்சியூட்டும் காட்சி பதிவாகியுள்ளது. பகல் நேரத்தில் சாதாரணமாகக் குட்டித் தூக்கம் போடும் வழக்கம் சிலருக்கு இருக்கும் நிலையில், இங்கு கடைக்காரர் போட்ட அந்தச் சிறு தூக்கம் அவருக்குப் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளதாக இந்த வீடியோவின் மூலம் தெரியவந்துள்ளது.

இந்த வீடியோவில், கடைக்காரர் எவ்வித சலனமும் இன்றி நிம்மதியாக உறங்கிக் கொண்டிருக்க, உள்ளே நுழையும் திருடன் எவ்வித சத்தமும் போடாமல் மிக சாதுரியமாக நகைகளைத் திருடுகிறான். நகைகளை எடுத்த பிறகு, யாருக்கும் சந்தேகம் வராதவாறு கடையின் டிராயரை மீண்டும் மூடிவிட்டு அங்கிருந்து தப்பிச் செல்கிறான். திருடன் வெளியேறிய அடுத்த கணமே கடைக்காரருக்கு ஏதோ உணர்வு ஏற்பட்டு கண் விழிக்கிறார், ஆனால் அதற்குள் திருடன் அங்கிருந்து தப்பியோடிவிட்டான். இந்த வீடியோவுடன் சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் தகவல்களின்படி, அந்தத் திருடன் சுமார் 5 கிலோ தங்கம் மற்றும் 12 கிலோ வெள்ளியைத் திருடிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

   

இணையத்தில் வேகமாகப் பரவி வரும் இந்த வீடியோவைக் கண்ட சமூக வலைத்தளப் பயனர்கள் பல்வேறு விதமான கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். சிலர் இச்சம்பவம் உண்மை என்று நம்பி, கடைக்காரரின் இந்த ஆழமான உறக்கத்தைக் கிண்டல் செய்தும், திருடனின் “நேர்மையான” திருட்டுத்தனத்தைப் பாராட்டியும் வேடிக்கையாகக் கருத்துப் பதிவிடுகின்றனர். அதே சமயம், மற்றொரு தரப்பினர் இது உண்மையான திருட்டுச் சம்பவம் அல்ல என்றும், சமூக வலைத்தளங்களில் லைக்குகளைப் பெறுவதற்காகவும் வைரலாவதற்காகவும் திட்டமிட்டு நடிக்கப்பட்ட ஒரு போலி வீடியோ என்றும் விவாதித்து வருகின்றனர்.