நடிகர் அஜித்தின் 62 ஆவது திரைப்படம் தான் விடாமுயற்சி. மகிழ் திருமேனி இந்த திரைப்படத்தை இயக்கியுள்ள நிலையில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். வில்லனாக ஆரவ், ஆக்ஷன் கிங் அர்ஜுன், வில்லியாக ரெஜினா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளார்கள். படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இந்தத் திரைப்படத்தை லைகா நிறுவனம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரித்துள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக படத்தின் வேலைகள் நடைபெற்று வந்த நிலையில் படம் இந்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் சில தவிர்க்க முடியாத காரணங்களால் படம் ரிலீஸ் ஆவதில் பிரச்சனை ஏற்பட்டது. இதனால் படத்தின் ரிலீஸ் தேதி திடீரென மாற்றப்பட்டது. அதன் பிறகு பிப்ரவரி 6ம் தேதி விடாமுயற்சி திரைப்படம் ரிலீஸ் ஆகும் என கூறப்பட்ட நிலையில் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரசிகர்கள் அனைவரும் கொண்டாடும் விதமாக பிப்ரவரி 6 ஆம் தேதி விடாமுயற்சி திரைப்படம் வெளியானது.
ஏகப்பட்ட கட்டவுட்டுகள் வைக்கப்பட்டு பட்டாசுகள் வெடித்து ரசிகர்கள் பண்டிகையாக விடாமுயற்சி திரைப்படத்தை கொண்டாடினர். அஜர்பைஜானில் தனது காதல் மனைவியை கடத்திய கும்பலிடம் இருந்து அவரை ஹீரோ எப்படி காப்பாற்றுகிறார் என்ற கதைக்களத்தை கொண்ட விடாமுயற்சி திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் இருந்து கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது.
அமெரிக்காவில் மிக அதிக சம்பளம் தந்த கார்ப்பரேட் மார்க்கெட்டிங் வேலையைத் துறந்து, நாய்களை நடைப்பயிற்சிக்கு அழைத்துச் செல்லும் தொழிலை தொடங்கிய…
ஹைதராபாத்தின் மலாக்பேட் பகுதியில் உள்ள அக்பர் பாஹ் இடத்தில் பட்டப்பகலில் பரபரப்பான ஒரு திருட்டு சம்பவம் நடந்துள்ளது. அங்கே நிறுத்தப்பட்டிருந்த…
கொடூரமாகக் கடத்தப்பட்டு ஏழு ஆண்டுகள் இருண்ட உலகிற்குள் முடக்கப்பட்ட ஒரு சிறுமி, கொரோனா பெருந்தொற்று காலத்தில் துணிச்சலாகத் தப்பித்துத் தன்…
பொதுவெளியில் பெற்றோர்களுக்கிடையே நிகழும் வன்முறைச் சம்பவங்கள், அங்கிருக்கும் குழந்தைகளை வெறும் பார்வையாளர்களாக மட்டும் வைப்பதில்லை; மாறாக, அவர்களின் மன உலகைப்…
ஒரு நாள், கடுமையான பசியால் வாடிய பிச்சைக்காரன் ஒருவன், மிகுந்த சிரமப்பட்டு தனக்காகச் சேகரித்த சிறிதளவு உணவை வைத்திருந்தான். அப்போது,…
தமிழ்நாட்டில் அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக மற்றும் தவெக இடையேயான மோதல் புதிய கட்டத்தை எட்டியுள்ளது. முதல்வர் விஜய்…