இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூலில் சாதனையும் படைத்து வருகிறது. விக்ரம் படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கம், தளபதி விஜய்யின் வெறித்தனமான நடிப்பு என அனைத்தும் சேர்ந்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் கட்டி இழுத்தத்தின் விளைவு தான் இந்த வெற்றி என கொண்டாடி வருகின்றனர் ரசிகர்கள்.
நடிகர் விஜய்யின் லியோ படத்துக்கு கடைசி வரை ஏகப்பட்ட சர்ச்சைகளும் பிரச்சனைகளும் வெடித்தன. இறுதி வரை படம் சுமூகமாக ரிலீஸ் ஆகுமா? என்கிற சிக்கல் நிலவி வந்தது. அதிகாலை காட்சிக்கு அனுமதி இல்லை, ஆடியோ லான்ச் ரத்து, ரோகிணி தியேட்டர் இருக்கைகள் சேதம், கடைசி வரை தியேட்டர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் இடையே ஷேர் பங்கீட்டில் பிரச்சனை என பல பிரச்சனைகள் இருந்தாலும் அத்தனை பிரச்சனைகளையும் அசால்ட்டாக தட்டி விட்டு லியோ தற்பொழுது சாதனை புரிந்து வருகிறது.
மேலும் இத்திரைப்படம் உலகளவில் 148.5 கோடி ரூபாயை வசூலித்ததன் மூலமாக தளபதி என்றும் மாஸ் தளபதி தான் என்பதை நிரூபித்துள்ளது. இந்நிலையில் தற்பொழுது லியோ 4 நாட்களில் சுமார் 400 கோடி வசூலை நெருங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஒட்டுமொத்தமாக லியோ திரைப்படம் உலகளவில் இதுவரை 392 கோடி வசூலை ஈட்டியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
சனி , ஞாயிறு விடுமுறை இதைத்தொடர்ந்து திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளும் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி விடுமுறை என்பதால் லியோ படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும் என்றே கூறப்படுகிறது. இதனால் ஜெயிலர் திரைப்படத்தின் வசூலை லியோ முறியடிக்கும் என தளபதி ரசிகர்கள் வெறித்தனமாக இதனை கொண்டாடி வருகின்றனர்.
பிரபல யூடியூபரான சர்பராஸ் என்பவர் ரயிலில் பயணம் செய்தபோது, அங்கிருந்த வியாபாரி ஒருவரிடம் 30 ரூபாய் கொடுத்து இரண்டு சமோசாக்களை…
சமீபகாலமாக சமூக வலைதளங்களில் தொடர்ந்து பேசுபொருளாக இருந்து வரும் நடிகை திரிஷா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஒரு பதிவு…
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில், இணையத்தொடர்கள் (Web Series) மற்றும் குற்றப் பின்னணி கொண்ட காட்சிகளைப் பார்த்து ஈர்க்கப்பட்ட 17 வயது…
உத்தரப் பிரதேச மாநிலம் கோண்டா பகுதியில், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தன் குழந்தையைக் கீழே கட்டி வைத்துவிட்டு,…
கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தின் கீழ் தகுதியற்ற பயனாளர்களைக் கண்டறிந்து நீக்கும் பணிகளில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டு…
பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை புதிய கட்சி தொடங்கப் போகிறார் என்ற வதந்திகள், கோவையில் அவரது ஆதரவாளர்கள்…