“என் பொண்ணு உனக்கு வேணுமா…” கதறி அழுத மகள்…! காதலனின் கழுத்தறுத்து கொன்ற 46 வயது பெண்…. பகீர் சம்பவம்…!!

By Devi Ramu on மார்கழி 12, 2025

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில், சூர்ய பிரதாப் சிங் (35) என்ற தனியார் நிறுவனப் பொறியாளர், தனது கள்ளக்காதலி ரத்னா (46) மற்றும் அவரது இரண்டு மகள்களால் கழுத்தை அறுத்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லக்னோ கிரீன் சிட்டி பகுதியில், சூர்ய பிரதாப் சிங்கும் ரத்னாவும் லிவ்-இன் உறவில் ஒன்றாக வசித்து வந்தனர். ரத்னாவுக்கு 17 மற்றும் 14 வயதுடைய இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில், சூர்ய பிரதாப் சிங்குக்கு ரத்னாவின் மூத்த மகள் மீது ஆசை ஏற்பட்டு, அவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

   

இதுகுறித்து மகள் தாயிடம் தெரிவித்ததால், ரத்னாவுக்கும் சூர்ய பிரதாப் சிங்குக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று இரவு மீண்டும் தகராறு முற்றவே, ஆத்திரமடைந்த ரத்னா தனது இரு மகள்களுடன் இணைந்து, சூர்ய பிரதாப் சிங்கை கீழே தள்ளி, கத்தியால் அவரது கழுத்தை அறுத்துக் கொடூரமாகக் கொலை செய்தார்.

   

சம்பவம் குறித்து போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, சூர்ய பிரதாப் சிங் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. விசாரணையில், “என் மகளிடம் தவறாக நடக்க முயன்றதால் கொன்றேன்” என்று ரத்னா ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் ரத்னா மற்றும் அவரது இரண்டு மகள்களையும் கைது செய்தனர்.