CM விஜய் கொடுத்த அந்த சீக்ரெட் ஆர்டர்…. ஒரே இரவில் சிக்கிய 42 ரவுடிகள்…. தமிழகம் முழுவதும் உச்சக்கட்ட அலெர்ட்….!

By Nanthini on ஐப்பசி 29, 2026

Spread the love

தமிழகத்தில் குற்றச் சம்பவங்களைத் தடுத்து சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முதலமைச்சர் விஜய் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் சூழலில், காவல்துறையினரும் அதிரடி வேட்டையில் இறங்கியுள்ளனர். இதன் தொடர்ச்சியாக, சேலத்தில் நடைபெற்ற ஒரே இரவு சோதனையில் 42 ரவுடிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும், தேனி சிறையில் இருந்து தப்பிச் சென்ற 17 கைதிகளையும் காவல்துறையினர் சுதாரிப்பாகச் செயல்பட்டு மீண்டும் கைது செய்து அதிரடி காட்டியுள்ளனர். இதனிடையே, சிறையிலிருந்து கைதிகள் தப்பிக்க முயன்றால் காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தலாம் என்ற டி.ஜி.பி-யின் உத்தரவுக்கு பின்னணியில், முதலமைச்சரின் கடுமையான அறிவுறுத்தலே முதன்மை காரணமாக உள்ளதாகக் காவல்துறையினர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.