தமிழகத்தில் வேலையில்லாப் பட்டதாரிகளுக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. தவெக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி, 29 வயதுக்கு மேற்பட்ட வேலை கிடைக்காத பட்டதாரிகளுக்கு மாதம் ₹4,000 மற்றும் டிப்ளோமா படித்தவர்களுக்கு மாதம் ₹2,500 உதவித்தொகையாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உதவித்தொகையைப் பெற விரும்பும் தகுதியுள்ள நபர்கள், தங்கள் வேலைவாய்ப்பு அடையாள அட்டையை (Employment ID card) புதுப்பித்து வைத்திருப்பது அவசியம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை முதலமைச்சர் விஜய் விரைவில் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
