ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள போதைப்பொருள் மறுவாழ்வு மையத்தின் மீது பாகிஸ்தான் நடத்தியுள்ள வான்வழித் தாக்குதல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் இதுவரை சுமார் 400 பேர் கொல்லப்பட்டிருப்பதாக ஆப்கானிஸ்தான் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதுடன், 250-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளது.
போதைப்பொருள் அடிமைகளுக்கு சிகிச்சை அளித்து வந்த இந்த மருத்துவமனையில் நடத்தப்பட்ட தாக்குதலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக்கூடும் என உள்ளூர் ஊடகங்கள் அச்சம் தெரிவித்துள்ளன. இச்சம்பவம் இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லையோர பதற்றத்தை உச்சக்கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளதுடன், சர்வதேச அளவில் பெரும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
