Connect with us

400 கோடியாம்-ப்பு…!! விற்பனைக்கு வரும் மறைந்த நடிகரின் பங்களா…! விலைக்கு வாங்கவுள்ள மிகப்பெரிய நிறுவனம்…!

CINEMA

400 கோடியாம்-ப்பு…!! விற்பனைக்கு வரும் மறைந்த நடிகரின் பங்களா…! விலைக்கு வாங்கவுள்ள மிகப்பெரிய நிறுவனம்…!

 

பாலிவுட்டின் காதல் மன்னன், எவர்கிரீன் ரொமான்டிக் சூப்பர்ஸ்டார் என்று அன்புடன் அழைக்கப்பட்டவர் தேவ் ஆனந்த்.  1946ம் ஆண்டு ஹம் ஏக் ஹெய்ன் படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார் தேவ் ஆனந்த். பின்னர் அதற்கு அடுத்த ஆண்டு வெளியான ஸித்தி படம் அவரை சூப்பர் ஸ்டாராக உயர்த்தியது. அதன் பின்னர் அவர் நடித்த படங்கள் அத்தனையுமே சூப்பர் ஹிட்டாகின.

Dev Anand

   

 

பேயிங் கெஸ்ட், பாஸி, ஜூவல் தீப், சிஐடி, ஜானி மேரா நாம், அமீர் காரிப், வாரன்ட், ஹரே ராமா ஹரே கிருஷ்ணா, தேஸ் பர்தேஸ் ஆகியவை தேவ் ஆனந்த் நடிப்பில் வெளியான சில சூப்பர் டூப்பர் ஹிட் படங்களாகும். 2001ம் ஆண்டு பத்ம பூஷன் விருதும், 2002ம் ஆண்டு தாதா சாஹேப் பால்கே விருதும் அளித்துக் கெளரவிக்கப்பட்டார் தேவ் ஆனந்த். 1949ம் ஆண்டு நவ்கேதன் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் என்ற பட நிறுவனத்தைத் தொடங்கி 35க்கும் மேற்பட்ட படங்களைத் தயாரித்துள்ளார் தேவ் ஆனந்த். 2 முறை பிலிம்பேர் விருதுகளை வென்றுள்ளார் தேவ் ஆனந்த்.

தேவ் ஆனந்த்துடன் பிறந்த இரு சகோதரர்களான சேத்தன் ஆனந்த், விஜய் ஆனந்த் ஆகியோரும் கூட திரைத் துறையில் பிரபலமானவர்கள்தான்.   இவர் 2011-ல் தனது 88-வது வயதில் தேவ் ஆனந்த் மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார். அவர் சூப்பர் ஸ்டாராக வலம் வந்தபோது வசித்த சொகுசு பங்களா மும்பை ஜூஹு பகுதியில் உள்ளது.  40 ஆண்டுகள் இந்த பங்களாவில்தான் வாழ்ந்தார். தற்போது பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு ரூ.400 கோடிக்கு அந்த பங்களாவை விற்க குடும்பத்தினர் முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Continue Reading
To Top