ஜோதிட சாஸ்திரத்தில் அறிவு, செல்வம், அதிர்ஷ்டம் மற்றும் வளர்ச்சிக்கு அதிபதியாக விளங்கக்கூடிய குரு பகவான், வரும் அக்டோபர் 31 ஆம் தேதி சிம்ம ராசிக்கு பெயர்ச்சியாகி, கேது பகவானின் ஆதிக்கம் கொண்ட மகம் நட்சத்திரத்தில் நுழையவுள்ளார். இந்த அபூர்வ நட்சத்திரப் பெயர்ச்சியின் தாக்கத்தால் 4 ராசிகளுக்குத் தொழில் முன்னேற்றம், திடீர் பணவரவு மற்றும் பொருளாதாரத்தில் பிரம்மாண்ட மாற்றங்கள் ஏற்படப் போகிறது.
மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்குத் தொழில் ரீதியாக புதிய உச்சங்களைத் தொடும் வாய்ப்புகள் தேடி வரும். பணியிடத்தில் மேல் அதிகாரிகளின் ஆதரவுடன் கூடுதல் பொறுப்புகளும், வியாபாரிகளுக்கு லாபம் தரக்கூடிய புதிய ஒப்பந்தங்களும் கிடைக்கும். நீண்ட நாட்களாக வராமல் இருந்த வராபக்கடன்கள் வசூலாகி நிதிநிலைமை பலப்படும்.
சிம்மம்: குருவின் மகம் நட்சத்திரப் பிரவேசம் சிம்ம ராசிக்காரர்களுக்குத் தன்னம்பிக்கையையும் தலைமைப் பண்பையும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்குப் பல நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. தொழிலில் புதிய முதலீடுகள் மூலம் லாபம் இரட்டிப்பாகும்.
விருச்சிகம்: விருச்சிக ராசியினருக்குச் சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். செல்வாக்கு மிக்க மனிதர்களின் அறிமுகத்தால் தொழிலில் பெரிய வாய்ப்புகள் கதவைத் தட்டும். வருமானம் கணிசமாக உயர்வதுடன் சேமிப்பும் அதிகரிக்கும், குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் கை கூடி வரும்.
கும்பம்: நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்த கும்ப ராசியினருக்குப் புதிய வருமான வழிகள் திறக்கும். ஒரே வருமானத்தை நம்பியிருந்த நிலை மாறி கூடுதல் வருமானம் வரத் தொடங்கும். நீண்ட நாட்களாகத் தள்ளிப்போன காரியங்கள் வெற்றிகரமாக முடிந்து கைநிறையப் பணப்புழக்கம் அதிகரிக்கும்.
நாட்டின் தலைநகரான டெல்லியில் உள்ள பரபரப்பான நேரு பிளேஸ் பகுதியில், தனியாக வந்த இளம் பெண் ஒருவரிடம் பாலியல் அத்துமீறலில்…
ஆந்திரப் பிரதேசம் நந்தியாலைச் சேர்ந்த தம்பதியினர், இணையவழி ஆன்லைன் முதலீட்டுத் திட்டங்களில் பணத்தை இழந்து ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக,…
அரியானா மாநிலம் குர்கானில், தனது மின்சார வாகனத்திற்கு மின்னூட்டம் செய்ய வந்த இளம் பெண் ஒருவருக்கு நேர்ந்த மோசமான அனுபவம்…
நேபாள நாட்டில் உள்ள 7,126 மீட்டர் உயரமுள்ள 'ஹிம்லுங் ஹிமால்' மலைப் பகுதியின் அடிவார முகாமில் ஏற்பட்ட பயங்கர பனிச்சரிவில்…
அமராவதி மாவட்ட மகளிர் மருத்துவமனையின் பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி அதிகாலை 2:50…
இந்தியாவில் மருத்துவக் கையுறைகள், உறைகள், மருத்துவக் குழாய்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் உற்பத்திக்கு இயற்கை ரப்பர் மற்றும் லேடெக்ஸ் மிக…