கர்நாடகா மாநிலத்தில் கலபுரகி மாவட்டம் சேடம் தாலுக்கா கிராமத்தை சேர்ந்தவர் சாயப்பா என்ற தாயப்பா . இவர் அந்த ஊரில் நாட்டு வைத்தியராக இருந்துள்ளார். குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கு நாட்டு மருந்துகள் கொடுத்து வந்துள்ளார் . அதன்படி சேடம் அருகே புகரப்பள்ளி கிராமத்தை சேர்ந்த லட்சுமி, சித்தார்புரா தாலுகா பீமனஹள்ளியை சேர்ந்த மனோகர், சகாபாத் டவுனை சேர்ந்த கணேஷ் ராத்தோட், நாகேஷ் ஆகிய நான்கு பேரும் இமடா புரா கிராமத்திற்கு நேற்று முன்தினம் வந்துள்ளனர். பின்னர் குடிப்பழக்கத்தை மறப்பதற்காக சாயப்பா கொடுத்த மருந்தை நான்கு பேரும் குடித்துள்ளனர். அதே நேரத்தில் நான்கு பேருக்கும் மூக்கு வழியாகவும் மருந்து கொடுத்து உள்ளார் சாயப்பா.
திடீரென்று, நான்கு பேரும் வாந்தி , மயக்கம் உள்ளிட்ட உடல்நல கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளனர் . உடனடியாக நான்கு பேரையும் அருகில் இருந்த அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துள்ளார் சாயப்பா. அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவே லட்சுமியும், கணேஷ் ராத்தோட் என்பவரும் உயிரிழந்தனர். மேலும் மனோகர், நாகேஷுக்கும் தீவிர சிகிக்சை அளித்து வந்தது. ஆனாலும் இருவருமே நேற்று அதிகாலை உயிரிழந்தார்கள்.
நாட்டு வைத்திய சாயப்பாவின் மருந்தை குடித்த 4 பேருமே பலியாகி விட்டனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .இதைக் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன . விசாரணையில் சாயப்பா ஒரு போலி வைத்தியர் என்று தெரியவந்துள்ளது. இதை அடுத்து போலி வைத்தியரான சாயப்பாவை கைது செய்ய முடிவெடுத்தனர். ஆனால் சாய்ப்பாவோ தலைமறைவாய்விட்டார். போலீசாருக்கு தெலுங்கானா மாவட்டத்தில் சாயப்பா தலைமறைவாக உள்ளது தெரியவந்தது . விரைவாக கிளம்பிய போலீசார் சாய் அப்பாவை அவரது தங்கையின் வீட்டில் இருந்து கைது செய்துள்ளனர். சாயப்பாவை விசாரணை நடத்தி வருகின்றன சாயப்பா கொடுத்த நாட்டு மருந்து விஷமாகி 4 பேர் பலியானதை தொடர்ந்து பிரேத பரிசோதனையில் சரியான காரணம் எதுவும் தெரியவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர்..
