அட கொடுமையே… ரூ 1.50 கோடி போதைப்பொருளுடன்… பிரபல பெண் யூடியூபர் உட்பட 4 பேர் கைது… கேரளாவில் நடந்த பகீர் சம்பவம்…!

By Swetha on ஐப்பசி 16, 2026

Spread the love

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்தச் செய்தியின் அடிப்படையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, சந்தேகத்திற்குரிய வகையில் வந்த காரை மடக்கிப் பிடித்து சோதனை நடத்தினர்.

அந்த சோதனையில், காரில் கடத்தி வரப்பட்ட சுமார் ரூ 1.50 கோடி மதிப்பிலான ஹான்சிகா மற்றும் இதர தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் இருப்பது கண்டறிப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. இந்தச் கடத்தல் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

   

இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய பிரபல பெண் யூடியூபரான மினு ஜாஸ்மின் (23) மற்றும் அவரது கூட்டாளிகள் 3 பேர் என மொத்தம் 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட காரும் பறிமுதல் செய்யப்பட்டதுடன், இவர்களுக்குப் பின்னால் உள்ள நெட்வொர்க் குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.