மர்மமாக இறந்த அண்ணன்…! வனப்பகுதியில் 2 பிள்ளைகளின் சடலம்… அருகே தாயும்…! பதற வைக்கும் சம்பவம்… போலீஸ் விசாரணை…!!

By Devi Ramu on புரட்டாதி 17, 2025

Spread the love

ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி இருக்கும் வனப்பகுதியில் கடந்த 14ஆம் தேதி ஒரு ஆணின் சடலம் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தது. அருகிலேயே ஒரு பெண்ணின் சடலமும் கிடந்தது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தபோது சடலங்கள் கிடந்த இடத்திற்கு அருகிலேயே இரண்டு குழந்தைகளின் சடலங்கள் புதைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட நபர் புதுச்சேரியை சேர்ந்த கலைச்செல்வன்(37) அவரது உறவினரான நாகப்பட்டினத்தை சேர்ந்த வெங்கடேசனின் மனைவி ஜெயமாலினி(32), ஜெயமாலினியின் பிள்ளைகள் ஹர்ஷினி(7), தர்ஷினி(3) என்பது தெரியவந்தது.

   

குவைத்தில் வேலை பார்த்த வெங்கடேசன் கடந்த ஜூலை மாதம் தனது மனைவி மற்றும் பிள்ளைகள் காணாமல் போனதால் இந்தியாவிற்கு வந்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஜெயமாலினி கலைசெல்வனுக்கு தங்கை உறவு முறை என்பது குறிப்பிடத்தக்கதாகும். அவர்கள் எப்படி இறந்தார்கள் என்பது தெரியவில்லை. இந்த விவகாரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.