ஒரே பைக்கில் மகிழ்ச்சியாகச் சென்ற குடும்பம்… எதிரே எமனாக வந்த டிராக்டர்… நொடி பொழுதில் நடந்த விபத்து… 4 பேர் துடி துடித்து உயிரிழந்த சோகம்…!

By Nanthini on மார்கழி 14, 2025

Spread the love

தெலுங்கானாவில் மேதக் மாவட்டத்தில் பைக் மற்றும் டிராக்டர் நேருக்கு நேர் மோதி கொண்டதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து போலீசார் கூறுகையில், செரிலிங்கம் பள்ளியிலிருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த சிலர் பைக்கில் சொந்த கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது இந்த விபத்து நடந்துள்ளது. டிராக்டர் ஓட்டுனர் அலட்சியமாக வண்டியை ஓட்டி வந்துள்ளார். அடிப்படை முன்னெச்சரிக்கை எதுவும் இல்லாமல் அவர் டிராக்டரை ஓட்டிச் சென்றுள்ளார்.

இரவு நேரத்தில் தெளிவற்ற சூழல் இருந்ததால் பின்னால் வந்த அந்த பைக் டிராக்டரை கவனிக்காமல் அதன் மீது மோதி விபத்துக்குள்ளானது. அந்தக் கோர விபத்தில் பைக்கில் இருந்த நான்கு பேரும் தூக்கி வீசப்பட்டனர். பலத்த காயமடைந்த அவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்திவரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.