டெல்லியின் மயூர்பிஹார் பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் பள்ளியில், இன்று காலை சுமார் 9 மணியளவில் ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்கு மூன்றாம் வகுப்பு படித்து வந்த மாணவி ஒருவர், வழக்கம் போல் வகுப்பறையில் இருக்கும்போது எதிர்பாராதவிதமாக திடீரென மயங்கி விழுந்தார்.
மாணவி மயங்கி விழுந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்கள், அவரை உடனடியாக மீட்டு நிர்மாண் பிஹாரில் இயங்கி வரும் ஒரு தனியார் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகக் கொண்டு சென்றனர். அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
https://x.com/shankersingh5/status/2117918899857707245/video/1
இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த டெல்லி காவல்துறை உடனே களத்தில் இறங்கி, மாணவியின் உயிரிழப்பிற்கான உண்மைக்கான காரணத்தைக் கண்டறிய வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. மாணவியின் மரணம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
