“அப்பாவை காணோமா?…. அம்மாவிடம் போய் கேளுங்க”…. விஜய்யைப் பற்றி மீண்டும் சர்ச்சையைக் கிளப்பிய நயினர் நாகேந்திரன்….!

By Nanthini on ஆவணி 15, 2026

Spread the love

பாஜக மாநில நிர்வாகி நயினர் நாகேந்திரன் தொடர்ந்து தமிழக முதல்வர் ஜோசப் விஜய் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்து வருவது அரசியல் களத்திலும் சமூக வலைத்தளங்களிலும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே நடிகர் விஜயின் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பாக அவர் பேசிய சர்ச்சை கருத்து கடும் எதிர்ப்பைச் சந்தித்த நிலையில், அவர் மன்னிப்பு கோரியிருந்தார். இருப்பினும், அந்த சர்ச்சையின் சுவடுகள் மறையும் முன்பே, தற்போது மீண்டும் முதல்வரைப் பற்றி அவர் பேசியுள்ள பேச்சு தமிழக அரசியலில் புதிய விவாதத்தையும் அதிர்வலைகளையும் உருவாக்கியுள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய நயினர் நாகேந்திரன், “சட்டசபையில் அப்பாவை காணோம் என்று சொல்கிறார்கள்; வீட்டுக்கு போய் அம்மாவிடம் கேட்டால்தானே அப்பா யார் என்று தெரியும்” எனப் பேசினார். இந்த விமர்சனம் நேரடியாக தமிழக முதல்வர் விஜயின் தாயாரைக் கொச்சைப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக தவெக தொண்டர்களும் நடுநிலையாளர்களும் கொதித்தெழுந்துள்ளனர். அரசியலில் நாகரிகமான முறையில் விமர்சனங்களை முன்வைக்காமல், தனிநபர் விமர்சனத்திலும் குடும்பத்தாரை இழுத்துப் பேசுவதிலும் நயினர் நாகேந்திரன் எல்லையைக் கடந்துவிட்டதாக சமூக வலைத்தளங்களில் கடுமையான கண்டனக் குரல்கள் எழுந்து வருகின்றன.