“2.5 மடங்கு வேகம்”… உக்ரைனை அழிக்க ரஷ்யாவுக்கு ரகசியமாகச் சென்ற ‘புல்சே-4’.. பின்னணியில் இருக்கும் கிம் ஜாங் உன்…. அதிரவைக்கும் பின்னணி….!

By Nanthini on ஆனி 8, 2026

Spread the love

உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யா பயன்படுத்தி வரும் அதிநவீன ஏவுகணைகளின் உற்பத்தியை உடனடியாக இரண்டரை மடங்காக (2.5 மடங்கு) அதிகரிக்க வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். நாட்டின் முக்கிய ஆயுதத் தயாரிப்பு தொழிற்சாலைக்கு நேரில் சென்று ஆய்வு நடத்திய அவர், அங்கு நிலவும் சில உற்பத்தி குறைபாடுகளைச் சுட்டிக்காட்டினார். பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் இராணுவப் பொதுப் பணியாளர்களின் தேவைகளை விரைவாக நிறைவு செய்யும் பொருட்டு, இந்த ஏவுகணைகளின் உற்பத்தியை முடுக்கிவிடுமாறு அவர் வலியுறுத்தியுள்ளதாக வடகொரியாவின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான KCNA உறுதிப்படுத்தியுள்ளது.

   

இராணுவ வல்லுநர்களின் கவனத்தை ஈர்த்துள்ள இந்த ஏவுகணையானது ‘புல்சே-4’ (Bulsae-4) எனப்படும் அதிநவீன டேங்க்-எதிர்ப்பு வழிகாட்டுதல் ஏவுகணையாகும் (Anti-Tank Guided Missile). இது இஸ்ரேல் நாட்டின் புகழ்பெற்ற ‘ஸ்பைக்-என்எல்ஓஎஸ்’ (Spike-NLOS) ஏவுகணையின் வடிவத்தை அப்படியே அச்சு அசலாகப் பிரதிபலிக்கும் வகையில் வடகொரியாவால் நகல் எடுக்கப்பட்டு தயாரிக்கப்பட்டதாகும். வடகொரியாவின் உள்நாட்டு மின்னணுத் தொழில்நுட்பக் குறைபாடுகள் காரணமாக, இது இஸ்ரேலின் அசல் ஏவுகணையை விடத் தொழில்நுட்ப ரீதியாகக் சற்று குறைவான திறன் கொண்டது என்றாலும், போர்க்களத்தில் மிக ஆபத்தான அழிவை ஏற்படுத்தக்கூடியது என ‘மிலிட்டர்னி’ (Militarnyi) பாதுகாப்பு ஊடகம் தெரிவித்துள்ளது.

   

வடகொரியா ஏற்கனவே இந்த புல்சே-4 ஏவுகணைகளை ரஷ்யாவிற்கு இரகசியமாக சப்ளை செய்துள்ள நிலையில், ரஷ்ய இராணுவம் இதனை உக்ரைன் பாதுகாப்புப் படைகளுக்கு எதிராகப் போர்க்களத்தில் தீவிரமாகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, உக்ரைனின் இலக்குகளைத் தகர்க்க M-2010 ரக கவச வாகனங்கள் மற்றும் எஸ்யூவி (SUV) ரக வாகனங்களின் மீது இந்த ஏவுகணை அமைப்புகளைப் பொருத்தி ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த ஏவுகணைகளின் துல்லியமான விவரங்கள் மற்றும் தொழில்நுட்பப் பின்னணிகள் உக்ரைன் போர்க்களத்தின் போக்கை மாற்றியமைக்கும் முக்கிய காரணியாகப் பார்க்கப்படுகிறது.

 

இந்த ஏவுகணையின் முழுமையான விவரங்கள் இரகசியமாக வைக்கப்பட்டிருந்தாலும், இது சுமார் 10 முதல் 15 கிலோமீட்டர் தூரம் வரை பாய்ந்து சென்று இலக்குகளைத் தாக்கக்கூடிய வல்லமை பெற்றது எனத் தெரியவந்துள்ளது. இதில் பொருத்தப்பட்டுள்ள ‘எலக்ட்ரோ-ஆப்டிகல் சீக்கர்’ மற்றும் ‘ஃபைபர்-ஆப்டிக் கேபிள்’ வழிகாட்டுதல் தொழில்நுட்பம் மூலம், ஏவுகணை பயணிக்கும் போது காட்டும் நேரடி வீடியோ காட்சியை ஆபரேட்டரால் பார்க்க முடியும். இதன் மூலம், போர்க்களத்தில் உள்ள தடைகளைத் தாண்டி, நேரடியாகக் கண்ணுக்குத் தெரியாத மறைவிடங்களில் இருக்கும் உக்ரைனிய இலக்குகளையும் மிகத் துல்லியமாகத் தாக்கி அழிக்க ரஷ்ய இராணுவத்திற்கு இது வழிவகுக்கிறது.