ஈரானில் நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு எதிராக வெடித்துள்ள மக்கள் போராட்டம், தற்போது பெரும் வன்முறையாக உருவெடுத்துள்ளது. இந்தப் போராட்டங்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,090 ஆக அதிகரித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்தியாவசியப் பொருட்களின் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் 75% வரை உயர்ந்துள்ளதால், மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடி வருகின்றனர்.
தற்போது இந்தப் போராட்டம் வெறும் விலைவாசி உயர்வுக்கானது மட்டுமல்லாமல், மன்னராட்சி ஆதரவாளர்களுக்கும் மத குருமார்களின் ஆட்சிக்கும் இடையிலான அதிகாரப் போட்டியாகவும் உருமாறியுள்ளது. இதற்கிடையில், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி, நாட்டின் தற்போதைய நிலைக்கு அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டிரம்ப் தான் முழு காரணம் என்றும், அவரே முதன்மைக் குற்றவாளி என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
