அட கடவுளே… மலைபோலக் குவிந்த குப்பை மேடு… சரிந்து 30 பேர் பரிதாப பலி… கினியாவில் நடுநடுங்க வைக்கும் பேரழிவு…!

By Swetha on ஆவணி 24, 2026

Spread the love

கினியா நாட்டின் தலைநகரான கோனாக்ரியில் அமைந்துள்ள மிகப்பெரிய குப்பைக் கிடங்கில், திடீரெனப் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. அங்கு மலைபோலக் குவிக்கப்பட்டிருந்த பல டன் குப்பைகள் ஒரே நேரத்தில் சரிந்து விழுந்ததில், அதன் அருகில் இருந்த பல ஏழை எளிய மக்களின் குடிசைகள் முற்றிலுமாக புதையுண்டன. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது என உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தக் கொடூர விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், 6 பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குப்பைக் கூளங்களுக்குள் இன்னும் சிலர் சிக்கியிருக்கலாம் என்ற அச்சத்தால், இடிபாடுகளுக்கு இடையே உயிர் பிழைத்தவர்களைக் கண்டறியும் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

   

விபத்து நடப்பதற்கு முன்பே, அப்பகுதியில் ஆபத்தான நிலையில் இருந்த குப்பைக் கிடங்கைச் சுற்றியுள்ள இடங்களில் வசித்த மக்களுக்கு உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு அதிகாரிகளால் எச்சரிக்கை அறிவிப்புகள் வழங்கப்பட்டிருந்தன. இதனால் பெரும்பாலான மக்கள் முன்னதாகவே பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுவிட்டதால், பெரும் உயிரச்சேதம் தவிர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.