இந்தியன் 2 : ஒரு பாட்டு எடுக்க ஷங்கர் டிமாண்ட் பண்ண தொகை.. ஆடிப்போன தயாரிப்பு நிறுவனம்..

By Ranjith Kumar on பங்குனி 8, 2024

Spread the love

1996 ஆம் ஆண்டு கமலஹாசன் நடிப்பில் சங்கர் இயக்கத்தில் வெளிவந்த இந்தியன் படம் தமிழ் திரை உலகில் இதுவரை பார்த்திடாத அளவு வித்யாசமான கதை அமைத்து தமிழ் ரசிகர்களுக்கு மாபெரும் விருந்தாக இயக்குனர் வழங்கினார். இப்படம் ரசிகர் மத்தியில் தற்போது வரை மிக பிடித்த படத்தில் ஒன்றாகும். சில மாதத்திற்கு முன்பாக தான் இப்படத்தின் பார்ட் 2 எடுக்கப் போவதாக சங்கர் அவர்கள் தெரிவித்திருந்தார்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தில் மிக வைரல் ஆகி கொண்டிருந்தது, இப்படப்பிடிப்பு மார்ச் மாத ஆரம்பத்தில் முடிந்து விடும் என்று தெரிவித்திருந்த படக்குழு, சித்தார்த், பிரியா பவானி சங்கர் இருவருக்கும் இடைப்பட்ட காதல் பாடல் ஒன்று இருக்கிறது, அப்பாடல் தற்போது எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்திருந்தார்கள். அத்துடன் படம் முடிந்து விடும் என்று தெரிய வந்த நிலையில், தற்போது மீண்டும் ஒரு பாடல் கமல்ஹாசனை வைத்து இயக்க உள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

   

ஆனால் இப்பாடலுக்கு கிட்டத்தட்ட 30 கோடி அளவில் பிரம்மாண்டமாக ஷங்கர் இயக்க உள்ளதாக தெரிவித்திருக்கிறார். லைக்கா நிறுவனம் தற்போது சில காலமாக பணபற்றா குறை ஏற்பட்டுள்ளதால், பல பெரிய படங்களை தள்ளி வைத்திருந்தார்கள். இதனால்தான் அஜித்தின் விடாமுயற்சி படமே சற்று காலம் தாமதம் ஆகியது. அதனால் இப்பாட்டிற்கு ஆகும் செலவை தங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று லைக்கா கைவிரித்து விட்டதாம், அதனால் லைக்கா நிறுவனத்துடன் இணைந்து ரெட் ஜாயிண்ட் இப்படத்தை தயாரிக்க முன் வந்துள்ளது,

   

கமல் நடிக்கும் பாடலை ரெட் ஜெயின் நிறுவனம் தயாரிப்பதற்காக பணத்தை தந்துள்ளதாம். தற்போது இப்பாடல் எடுக்கப்பட்டு வருகிறது, முடிந்தவுடன் படம் போஸ் ப்ரொடக்ஷனுக்கு தயாராகுமாம். அதன் பின்னதாக படம் திரைக்கு வரும் தேதியை அறிவிப்போம் என்று ஷங்கர் தெரிவித்திருக்கிறார்.