30 அதிமுக MLA-க்கள் விஜய்க்கு ஆதரவு?…. இபிஎஸ் கையில் எடுத்த ‘கூவத்தூர்’ பார்முலா… இனிதான் ஆட்டமே ஆரம்பம்..!

By Nanthini on வைகாசி 7, 2026

Spread the love

தமிழக அரசியலில் தவெக ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மை இழுபறி நீடிக்கும் சூழலில், அதிமுகவுக்குள் ஏற்பட்டுள்ள உட்கட்சி மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவின் 47 எம்.எல்.ஏ-க்களில் சுமார் 30 பேர் விஜய்யின் ஆட்சிக்கு ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாகவும், ஆனால் எடப்பாடி பழனிசாமி மற்றும் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் தவெக-வுக்கு ஆதரவு தரத் திட்டவட்டமாக மறுத்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தச் சூழலில், தனது கட்சி எம்.எல்.ஏ-க்கள் தவெக பக்கம் தாவிவிடாமல் இருக்க, எடப்பாடி பழனிசாமி மீண்டும் புகழ்பெற்ற ‘ரிசார்ட் பார்முலாவை’ கையில் எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. எம்.எல்.ஏ-க்களைத் தனித்தனியாகப் பிரித்து ரகசிய இடங்களில் தங்கவைப்பதன் மூலம் கட்சி உடைவதைத் தடுக்கவும், விஜய்யின் ஆட்சியமைக்கும் கனவுக்கு முட்டுக்கட்டை போடவும் அதிமுக தலைமை தீவிரமாக முயன்று வருவது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.