30 வருடங்களுக்குப் பிறகு இன்று ஒன்றிணையும் சனி – சுக்கிரன்… அதிர்ஷ்டத்தை அள்ள போகும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா…?

By Nanthini on ஐப்பசி 11, 2025

Spread the love

நவகிரகங்களின் நீதிமானாக விளங்கக்கூடிய சனிபகவான் செய்யும் செயலுக்கு ஏற்றவாறு கர்ம பலன்களை தரக்கூடியவர். அதனைப் போலவே நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக இருக்கும் சுக்கிரன் காதல், ஆடம்பரம், சொகுசு மற்றும் அலகு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் சனியும் சுக்கிரனும் சேர்ந்து அக்டோபர் 11ம் தேதி அதாவது இன்று சமசப்தம யோகத்தை உருவாக்குகின்றனர். அதுவும் இந்த யோகம் சுமார் 30 வருடங்களுக்குப் பிறகு உருவாக உள்ளதால் குறிப்பிட்ட மூன்று ராசிக்காரர்களுக்கு நல்ல யோகம் கிடைக்க உள்ளது.

மகரம்:

   

இந்த ராசிக்காரர்களுக்கு தைரியமும் வீரமும் அதிகரிக்கும். வாழ்வில் நேர்மறையான மாற்றங்களை காண்பார்கள். தொழிலில் முன்னேற்றமும் புதிய வாய்ப்பு கிடைக்கும். பணியாற்றுபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். வணிகர்களுக்கு லாபம் நிதி நிலைமை வலுவடையும். ஆடம்பர பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். பணியாற்றுபவர்கள் உயர் அதிகாரிகளின் ஆதரவை பெறுவார்கள்.

   

மிதுனம்;

 

இந்த ராசிக்காரர்களுக்கு வேலை மற்றும் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். பணியாற்றுபவர்களுக்கு விரும்பிய இடம் மாற்றம் கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். அரசு வேலையில் நல்ல செய்தியை பெறுவார்கள். தொழிலதிபர்கள் நல்ல லாபத்தை பெறுவார்கள். வணிகத்தை விரிவாக்கம் செய்வதற்கான வாய்ப்பு கிடைக்கும்.

கும்பம்:

எதிர்பாராத நிதி ஆதாயங்களை பெறுவார்கள். நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். கடின உழைப்புக்கான பலன் கிடைப்பதோடு ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பணியாற்றுபவர்களுக்கு புதிய பொறுப்பு கிடைப்பதோடு வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதற்கான வாய்ப்புகளும் அதிகம். ஏற்கனவே செய்த முதலீடுகள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். புதிய வருமான ஆதாயங்களும் உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.