நவகிரகங்களின் மங்களநாயகனாக விளங்கும் குரு பகவான் ஞானம், படிப்பு, அறிவு, தொழில், திருமணம் மற்றும் குழந்தை பாக்கியம் ஆகியவற்றுக்கு காரணியாக விளங்குபவர். இந்நிலையில் வருகின்ற அக்டோபர் 18ஆம் தேதி குரு பகவான் கடக ராசிக்குள் நுழைய உள்ளார். இந்த கடக ராசியில் டிசம்பர் எட்டாம் தேதி வரை குரு பகவான் இருப்பார். அதன்படி குரு சுக்கிரனுடன் சேர்ந்து பஞ்சாங்க யோகத்தை உருவாக்க இருப்பதால் குறிப்பிட்ட மூன்று ராசிக்காரர்கள் இதனால் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.
மேஷம்:
இந்த ராசிக்காரர்கள் புதிய வீடு மற்றும் வாகனம் வாங்கும் வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடக்கூடும். உடல் மற்றும் மன ஆரோக்கியம் மேம்படும். வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். பணியாற்றுபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். சமூகத்தில் அந்தஸ்து அதிகரிக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் ஏற்படும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி காண்பீர்கள்.
கன்னி:
இந்த ராசிக்காரர்களுக்கு நீண்ட நாள் ஆசைகள் இந்த சமயத்தில் நிறைவேறும். நிதிநிலையில் நல்ல உயர்வு காண்பீர்கள். ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைப்பதோடு தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். பேச்சுத் திறனால் பல வேலைகளை சிறப்பாக முடித்து விடுவீர்கள். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைப்பதோடு வணிகர்களுக்கு நல்ல லாபம் மற்றும் பங்குச்சந்தை மூலம் நல்ல லாபத்தை சந்திப்பார்கள்.
மகரம்:
அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு இந்த ராசிக்காரர்களுக்கு கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் நல்ல லாபத்தை பெறுவார்கள். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாவதோடு நிதிநிலைமை சிறப்பாக இருக்கும். முடிவெடுக்கும் திறன்கள் மேம்படும்.
