தமிழக அரசியலில் எழுத்து பஞ்சாயத்து என்பது நீண்ட காலமாக இருந்து வருகிறது. புதிதாக கட்சி தொடங்குபவர்கள் ஏற்கனவே இருக்கும் பிரபலமான கட்சியின் பெயரில் ஒரு எழுத்தை மட்டும் முன், பின், நடுவில் மாற்றி சேர்த்து புதிய கட்சி தொடங்கி விடுகிறது காலமாக காலம் காலமாக நடந்து வருகிறது, இந்த நிலையில் மதிமுகவிலிருந்து விலகி புதிய கட்சியை தொடங்கியிருக்கும் மல்லை சத்யா தனது கட்சிக்கு திராவிட வெற்றி கழகம் என்று பெயர் சூட்டியுள்ளார்.
சுருக்கமாக திவெக, ஆங்கிலத்தில் TVK என்று வருகிறது. விஜய் கட்சியை ஏற்கனவே ரசிகர்கள் TVK என்று தொண்டர்கள் அழைத்து வரும் நிலையில் புதிய கட்சியின் பெயர் விஜய் கட்சிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது அரசியலில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தி வருவதாக தவெகவனர் தெரிவித்து வருகிறார்கள். வேல்முருகனின் கட்சியான தமிழக வாழ்வுரிமை கட்சியும் த.வா.க. எனவும் ஆங்கிலத்தில் டி.வி.கே. என்று தான் அழைக்கப்படுகிறது. அந்த வகையில் தமிழக அரசியலில் 3 டிவிகே கட்சி இருப்பதால் மக்களே குழம்பி போய்விடுவார்கள்.
