தப்பி தவறையும் உங்க வீட்டில் இந்த 3 பொருட்களை வைக்காதீங்க…. அத்தனை கஷ்டமும் வந்து சேரும்..!

By Nanthini on ஐப்பசி 30, 2025

Spread the love

நம்முடைய வீட்டில் நமக்குத் தெரியாமலேயே சில பொருட்களை நாம் வைத்திருப்பதன் மூலம் மேலும் மேலும் கஷ்டம் தான் வந்து சேரும். ஒவ்வொரு பொருளுக்கும் அதன் சொந்த ஆற்றல் உள்ளது. சில நேரங்களில் அவை நேர்மறை ஆற்றல் ஆகவும் சில நேரங்களில் அது எதிர்மறை ஆற்றல் ஆகவும் மாறிவிடும். நமக்குத் தெரியாமலேயே எதிர்மறை சக்தி கொண்ட பொருட்களை வீடுகளில் வாங்கி குவித்து விடுகின்றோம். அதில் ஒரு சில பொருள்களை தேவை அறியாமல் நாம் வைத்திருப்போம். ஆனால் இதனால் பல தீமைகள் வந்து சேரும். அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்வதற்கு எதிர்மறை ஆற்றல் கொண்ட பொருட்களை நம் வீட்டில் இருந்து அகற்ற வேண்டும்.

அவற்றின் இடத்தில் நேர்மறை ஆற்றல் நிறைந்த பொருட்களை நாம் வைக்க வேண்டும். இதுதான் வாஸ்து சாஸ்திரத்தின் அணுகுமுறையாகும். பலருடைய வீட்டின் மூலையில் உடைந்த மின்னணு பொருட்களை வைத்திருப்பார்கள். ஆனால் வாஸ்து சாஸ்திரத்தின் படி வீட்டின் மூலையில் உடைந்த பொருட்களை வைத்திருப்பது வீட்டிற்கு கடுமையான நிதி நெருக்கடியை உண்டாக்கும். வீட்டில் துருப்பிடித்த பொருட்களை வைத்திருந்தால் சனி தேவருக்கு மிகவும் கோபம் வரும். அதனால் கடுமையான நிதி நெருக்கடியை சந்திக்கக்கூடும்.

   

அதன்படி உடைந்த கடிகாரங்கள், துருப்பிடித்த இரும்பு அல்லது உடைந்த பாத்திரங்களை வீட்டில் எங்கும் வைத்திருக்கக் கூடாது. அவ்வாறு செய்வது வீட்டுக்குள் எதிர்மறை ஆற்றலை கொண்டு வரும். பலருடைய வீட்டில் பயனற்ற பழைய பொருட்களை வைத்திருப்பார்கள். இது மன உறுதியற்ற தன்மையை உருவாக்குகின்றது. மேலும் நேர்மறை ஆற்றல் வீட்டுக்குள் நுழைவதையும் தடுக்கின்றது. வாஸ்து சாஸ்திரத்தின்படி வீட்டின் மாடியை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அன்புள்ள தொட்டிகளில் செடிகளை நட வேண்டும். இது சுற்றுச்சூழலுக்கு உகந்தது மட்டுமல்லாமல் வீட்டில் நேர்மறை ஆற்றலையும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.