சென்னை மாவட்டம் கோட்டூர்புரம் போலீசார் கடந்த 2009-ஆம் ஆண்டு மது போதையில் தகராறு செய்ததாக பழனி என்பவரை பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவ பரிசோதனைக்கு ஒத்துழைக்காததால் பழனியை போலீசார் தாக்கியுள்ளனர். இதனையடுத்து வீட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்ட பழனி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக பழனியின் தந்தை ரங்கநாதன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதுகுறித்து விசாரணை நடத்திய வருவாய் கோட்டாட்சியர் பழனியின் மரணத்திற்கு காவல்துறையினரின் தாக்குதல் தான் காரணம் என அறிக்கை தாக்கல் செய்தார். அதன் அடிப்படையில் கோட்டூர்புரம் காவல் நிலைய குற்றப்பிரிவு உதவி ஆய்வாளராக இருந்த பி.ஆறுமுகம், தலைமை காவலர்களான மனோகரன், ஹரிஹரசுப்ரமணியன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா 10,000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவு பிறப்பித்தார்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த ஜீத் (@wbjit64) என்ற பைக் வோல்கர், தனது அபாரமான 'தேசி ஜுகாட்' (Desi…
தமிழக முதல்வர் விஜய், கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த அறிவிப்பின்படி,…
பெருநிறுவன வாழ்க்கையில் (Corporate life) நிலவும் விசித்திரமான மற்றும் நியாயமற்ற விதிமுறைகள் சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாக மாறுவது வழக்கமான…
மத்தியப் பிரதேசத்தின் தேவாஸ் நகரில் அனாதை இல்லத்துச் சிறுமிகளுக்குத் திருமணம் செய்து வைப்பதாகக் கூறி, 40-க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் லட்சக்கணக்கான…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அதிமுகவைச் சேர்ந்த மூன்று முக்கிய எம்.எல்.ஏ-க்களான மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), ஜெயக்குமார்…
மத்திய அரசின் 'பிஎம் கிசான்' (PM-KISAN) திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6,000 ரூபாய் நிதியுதவி தலா 2,000…