BREAKING: இடைத்தேர்தல் முடிந்ததும் CM விஜய் போடும் மாஸ் ஸ்கெட்ச்…. தூக்கப்படப் போகும் 3 அமைச்சர்கள்…. ரகசிய “பிளான் B” கசிந்தது….!

By Nanthini on புரட்டாதி 29, 2026

Spread the love

தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், இடைத்தேர்தல் முடிவடைந்த கையோடு தனது அமைச்சரவையில் பெரிய அளவிலான மாற்றங்களைச் செய்ய முதலமைச்சர் விஜய் திட்டமிட்டுள்ளதாக நம்பிக்கைக்குரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, திருப்திகரமாகச் செயல்படாத அமைச்சர்கள் சரத், ஜெகதீஸ்வரி மற்றும் விஜய் பார்த்திபன் ஆகிய மூன்று பேரின் பதவிகள் பறிக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. நிர்வாகத்தை மேலும் சுறுசுறுப்பாக்கவும், வரும் காலங்களில் மக்கள் நலத் திட்டங்களை விரைந்து செயல்படுத்தவும் ஏதுவாக இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தலைமைச் செயலகக் வட்டாரங்கள் உளவுப் தகவல்களைக் கசியவிட்டுள்ளன.

இப் பதவிநீக்கப் படலத்துடன் நிறுத்திக்கொள்ளாமல், மேலும் நான்கு முக்கிய அமைச்சர்களின் இலாகாக்களை மாற்றியமைக்கவும் முதலமைச்சர் விஜய் முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது. தென் மாவட்டங்களில் கட்சியின் செல்வாக்கை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், மதுரையைச் சேர்ந்த முக்கிய நிர்வாகி ஒருவருக்கு புதிதாக அமைச்சரவையில் வாய்ப்பளித்து முக்கியப் பொறுப்பு வழங்கப்பட உள்ளதாகவும் பேசப்படுகிறது. இடைத்தேர்தல் முடிவுகள் வெளியான உடனேயே இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகக் கூடும் என்பதால், மாநில அரசியல் வட்டாரத்தில் தற்போது எதிர்பார்ப்பும் பரபரப்பும் உச்சத்தை எட்டியுள்ளன.