BREAKING : திருப்பூர் சாலை விபத்து உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ₹3 லட்சம்.. சற்று முன் அறிவித்தார் முதல்வர் விஜய்..!!

By Swetha on வைகாசி 13, 2026

Spread the love

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் நிகழ்ந்த கோர சாலை விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் மிகுந்த வேதனை அளிப்பதாக தமிழக முதலமைச்சர் திரு. விஜய் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் செய்தியை அறிந்து மிகுந்த துயரமடைந்ததாகக் குறிப்பிட்ட அவர், விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

உயிரிழந்தவர்களின் குடும்ப நிலையை கருத்தில் கொண்டு, அவர்களுக்குத் தேவையான உடனடி உதவிகளை வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, உயிரிழந்த ஐந்து நபர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ₹3 லட்சம் நிதி உதவி வழங்க ஆணையிடப்பட்டுள்ளது. இந்தத் துயரமான நேரத்தில் அரசு அவர்களுக்குத் துணையாக இருக்கும் என்பதையும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.