BIG NEWS : கார் விபத்தில் MLA மகள் உள்பட 3 பேர் உடல் நசுங்கி பலி… பெரும் அதிர்ச்சி சம்பவம்…..!

By Nanthini on தை 9, 2026

Spread the love

மத்திய பிரதேச மாநிலம் ராஜ்பூர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ பாலபட்சன் மாநிலத்தின் முன்னாள் உத்துறை அமைச்சராக பணியாற்றியவர். இவருடைய மகள் பிரேர்னா பச்சன் நேற்று இரவு தனது நண்பர்கள் மூன்று பேருடன் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த லாரி ஒன்று கார் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் காரின் முன் பகுதி அப்பளம் போல நொறுங்கியது.

அதில் பிரேர்னா மற்றும் அவருடைய நண்பர்கள் இருவர் என மொத்தம் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். காரில் இருந்தா மற்றொரு இளம் பெண் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயிரிழந்த மூன்று பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து வருகிறார்கள்.