மேற்கு வங்க மாநிலம் பாஸ்சிம் மேதினிபூர் மாவட்டத்தில் உள்ள சாபாங் பகுதியில், பார்ஜிபோன் பாலம் அருகே இருசக்கர வாகனங்கள் அதிவேகமாகச் சென்று கொண்டிருந்துள்ளன. அப்போது, எதிர்பாராதவிதமாக அந்த இரண்டு பைக்குகளும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளாகின.
இந்த கொடூர விபத்தில் பைக்குகளில் பயணம் செய்த 3 பேர் தூக்கி வீசப்பட்டு, கடுமையான ரத்தக் காயங்களுடன் உயிருக்குப் போராடினர். விபத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக ஓடோடி வந்து, காயமடைந்தவர்களை மீட்டுச் சிகிச்சைக்காகச் சாபாங் கிராமப்புற மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கோர விபத்தின் பதறவைக்கும் காட்சிகள் அங்கிருந்த கேமராவில் பதிவாகி இணையத்தில் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து வந்த போலிஸார், விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
