“ஐயோ 3 உசுரு போச்சே”… கண்ணீரில் மூழ்கிய கிராமம்…. துணி துவைக்கச் சென்ற 3 சிறுமிகளுக்கு நேர்ந்த விபரீதம்.. கலங்க வைக்கும் பின்னணி….!

By Nanthini on மாசி 1, 2026

Spread the love

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அருகே உள்ள ஆரூர் கிராமத்தில், துணி துவைக்கச் சென்ற மூன்று சிறுமிகள் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அசோக் என்பவரின் மகள்கள் யுவஸ்ரீ (13), பிரியங்கா (11) மற்றும் வெங்கடேசன் மகள் பிரியா (13) ஆகிய மூவரும் கிராமத்திற்கு அருகிலுள்ள கிணற்றுக்குச் சென்றபோது, எதிர்பாராதவிதமாக கால் தவறி தண்ணீருக்குள் விழுந்துள்ளனர். இவர்கள் மூவரும் பொன்னமங்கலம் பகுதியில் உள்ள நடுநிலைப் பள்ளியில் பயின்று வந்த மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு இரண்டு சிறுமிகளின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், மற்றொரு சிறுமியின் உடலைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது குறித்து வாழைப்பந்தல் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே கிராமத்தைச் சேர்ந்த மூன்று சிறுமிகள் உயிரிழந்தது அந்த கிராமத்தையே கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது.