ரூ.420 கோடி ஊழல்…. “120 கேள்விகள்… உறைந்துபோன அறிவாலயம்”…. முன்னாள் அமைச்சரைச் சுழற்றிடிக்கும் ‘செக்-மேட்’ வியூகம்….!

By Nanthini on கார்த்திகை 3, 2026

Spread the love

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதில் பல கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றதாகத் தொடரப்பட்ட வழக்கில், திமுக முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியை 3 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மத்திய குற்றப்பிரிவு போலீசார் அவரைப் புழல் சிறையிலிருந்து தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துள்ள நிலையில், இச்சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விசாரணையை எதிர்கொள்ள புலனாய்வு அதிகாரிகள் ரூ.420 கோடி ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக மிகத் தீவிரமான 120 கேள்விகள் அடங்கிய பட்டியலைத் தயாரித்துள்ளனர். குறிப்பாக, ஆரம்ப மற்றும் பிந்தைய பதில்களில் முரண்பாடுகளை ஏற்படுத்தி சட்டரீதியாகச் சிக்கவைக்கும் ‘செக்-மேட்’ வியூகங்களை அதிகாரிகள் கையாண்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

   

வசூலிக்கப்பட்ட பணம் உயர் மட்டத் தலைவர்கள் யாருக்கெல்லாம் சென்றது என்பது குறித்த கோணத்தில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இச்சூழ்நிலையில், அன்பில் மகேஸுக்கு நெருக்கமான முக்கியப் புள்ளிகளின் பெயர்களை இவ்வழக்கில் இணைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக அறிவாலயத் தரப்பில் எழுந்துள்ள சந்தேகம், திமுக வழக்கறிஞர்கள் மத்தியில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

   

எனினும், விசாரணையின் போது குறிப்பிட்ட இடைவெளியில் வழக்கறிஞர் உடனிருக்கவும், தினசரி சந்தித்துப் பேசவும் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதுடன், அவரது உடல்நலனைக் கருத்தில் கொண்டு மருத்துவ வசதிகளையும் உறுதி செய்துள்ளது. இந்த 3 நாள் கஸ்டடி விசாரணை முடிவுகள் தமிழகத் தேர்தல் அரசியலில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது என்ற எதிர்பார்ப்பு உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.