“30 பேருக்குச் சமைக்கனும், டாட்டூ போடக்கூடாது”… திருமணத்திற்கு முன் போடப்பட்ட 3 கண்டிஷன்… இருதய அறுவை சிகிச்சை நிபுணராக இருந்தாலும் இதை செய்யணுமா..? பெண்ணின் வைரலாகும் வீடியோ…!!

Spread the love

நிச்சயிக்கப்பட்ட திருமண ஏற்பாடுகளின் போது பெண் மருத்துவர் ஒருவர் எதிர்கொண்ட பிற்போக்குத்தனமான சவால்கள் குறித்த இன்ஸ்டாகிராம் பதிவு சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ள பெண், ஒரு இருதய அறுவை சிகிச்சை நிபுணராக (Cardiothoracic Surgeon) பணிபுரியும் அளவிற்கு உயரிய கல்வித் தகுதியைப் பெற்றவர். இருப்பினும், திருமணப் பேச்சுவார்த்தையின் போது அவரது கல்வித் தகுதியை விட வீட்டு வேலைகளுக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

மணமகன் வீட்டார், தங்கள் மகனுக்கு வீட்டு வேலைகள் அல்லது சமையல் பற்றி எதுவுமே தெரியாது என்று வெளிப்படையாகக் கூறிவிட்டு, அந்தப் பெண் மருத்துவரிடம், “எதிர்காலத்தில் தினமும் 30 பேருக்குச் சமைக்க முடியுமா?” என்று கேட்டுள்ளனர். ஒரு பெண் உயிர் காக்கும் அறுவை சிகிச்சை நிபுணராக இருந்தாலும், அவரிடமிருந்து அடிப்படை வீட்டு வேலைகளையே சமூகம் அதிகம் எதிர்பார்க்கிறது என்பதை இந்தச் சம்பவம் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

மூன்றாவது வரனில், வருங்கால மணமகன் அந்தப் பெண்ணின் உடலில் உள்ள பச்சை குத்தலை (Tattoo) நீக்கினால் மட்டுமே திருமணத்திற்குச் சம்மதிப்பதாக நிபந்தனை விதித்துள்ளார். அந்தப் பெண் இது போன்ற மூன்று விதமான கசப்பான அனுபவங்களை எதிர்கொண்டதாக அவரது தோழி வீடியோவில் பகிர்ந்துள்ளார். பெண்களின் தொழில்முறை சாதனைகளை மதிக்காமல், வீட்டுப் பொறுப்புகளை மட்டும் அவர்கள் மீது சுமத்தும் இத்தகைய போக்கு குறித்து இணையவாசிகள் பலர் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்

Soundarya

Recent Posts

“உங்க அப்பா அங்கேயே சுத்திட்டு இருக்காரு!”… இறந்த தந்தையின் ஆவியை ‘பார்சல்’ செய்ய வந்த குடும்பம்…கோட்டா மருத்துவமனையில் நடந்த அதிர வைக்கும் தாந்திரீக சடங்கு…!!!

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவரின் ஆன்மாவை மீட்க அவரது…

5 மணத்தியாலங்கள் ago

“மனுஷன் பேசுறது நாய்க்கே புரியுதா?”… நாயுடன் அமர்ந்து ராஜு குமார் செய்த அலப்பறை… வயிறு குலுங்கச் சிரிக்கும் நெட்டிசன்கள்… வைரல் வீடியோ…!!!

சமூக வலைதளங்களில் எப்போது எது வைரலாகும் என்று கணிக்க முடியாத நிலையில், விலங்குகளின் ஒலியைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் பிரபல உள்ளடக்க…

5 மணத்தியாலங்கள் ago

“ஒரே ஒரு சின்ன தவறு.. அழகான புன்னகைக்கு ஆசைப்பட்டுமொத்த பற்களும் அவுட்!… துருக்கி பல் மருத்துவர் செய்த விபரீத… ஜாக்கியின் கண்ணீர் கதை”…!!!

அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் மேற்கொள்ளப்படும் அவசரமான மருத்துவ முடிவுகள் எவ்வளவு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பிரிட்டனைச்…

6 மணத்தியாலங்கள் ago

“அந்த 500 ரூபாய்க்கு பதில் லட்சங்களில் உதவி!”… அழுதுகொண்டிருந்த மூதாட்டியின் கண்ணீரை துடைத்த சமூக வலைத்தளம்… நெஞ்சை நனைக்கும் வைரல் சம்பவம்…!!!

சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…

6 மணத்தியாலங்கள் ago

“காசு கொடுத்தாத்தான் 4 பேர் வரணும்!”… ராபிடோ ஓட்டுநரின் அடாவடி செயலால் நடுத்தெருவில் நின்ற குடும்பம்… மும்பையில் நடந்த பகீர் சம்பவம்… வைரல் வீடியோ…!!!

மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…

6 மணத்தியாலங்கள் ago

“எங்களுக்கும் இப்படி ஒரு சார் கிடைச்சிருக்கலாம்!”… மாணவர்களுடன் சேர்ந்து பாடி அசத்திய கிதார் ஆசிரியர்… நெட்டிசன்களின் மனதை நெகிழ வைத்த ஆசிரியர்…. இணையத்தை நனைக்கும் வைரல் வீடியோ…!!!

இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…

7 மணத்தியாலங்கள் ago