மராட்டியம் மாநிலம் பத்ராட் கிராமத்தை சேர்ந்த ஹர்ஷல் (17) என்ற சிறுவனும் அதே பகுதியை சேர்ந்த சிறுவனின் நண்பரான பிரசாந்த் (17) இருவரும் சேர்ந்த நேற்று முன்தினம் காலை 10 மணியளவில் அருகில் உள்ள ரயில்வே கேட் பகுதிக்கு சென்றுள்ளனர். பிறகு இருவரும் காதில் ஹெட்போனை மாட்டிக் கொண்டு தண்டவாளத்தில் நின்று ரீல்ஸ் வீடியோ எடுத்தனர். அந்த சமயத்தில் தண்டவாளத்தில் அகமதாபாத் – ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் வேகமாக வந்து கொண்டிருந்தது. ஆனால் ரயில் வந்ததை கவனிக்காமல் சிறுவர்கள் இருவரும் ரீல்ஸ் வீடியோ பதிவு செய்து கொண்டிருந்த நிலையில் தண்டவாளத்தில் இருவரும் நிற்பதை கண்ட என்ஜின் டிரைவர் ஹாரன் நடித்துள்ளார். ஆனால் காதில் ஹெட்போன் மாட்டிக் கொண்டிருந்ததால் ஹாரன் சத்தம் சிறுவர்களுக்கு கேட்கவில்லை.
அப்போது வேகமாக வந்த ரயில் சிறுவர்கள் மீது மோதி சென்றது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில் உடனே ரயில்வே போலீசார் உதவியுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஆனால் சிறுவர்கள் இருவரும் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்து விட்டன. இந்த சம்பவம் தொடர்பாக தற்போது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இன்றைய காலத்து இளம் தலைமுறை ஆபத்தை உணராமல் சில செயல்களில் ஈடுபடுவது இறுதியில் உயிரிழப்புக்கு வழிவகுத்து விடுகிறது.
1500 பயிற்சி அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறித்த செய்தி இடம் பெற்றுள்ளது. தகுதியுள்ள பட்டதாரிகள் இன்று முதல்…
பாரத ஸ்டேட் வங்கி கடந்த நிதியாண்டில் பேப்பர் மற்றும் பேனா உள்ளிட்ட ஸ்டேஷனரி பொருட்களுக்காக மட்டும் ரூ.986 கோடி செலவிட்டுள்ளதாகக்…
போன்பே-ஐ ஒரு வருடம் வரை பயன்படுத்தாமல் வைத்திருக்கும் பயனர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட உள்ளது. தொடர்ந்து 12 மாதங்கள் பயன்படுத்தப்படாத…
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, நாடு முழுவதும் 1,500 பயிற்சி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான…
முகேஷ் அம்பானி குடும்பம் முதல் பாலிவுட் நட்சத்திரங்கள் வரை அனைவரது வீட்டு விசேஷங்களிலும் தவறாமல் கலந்துகொள்ளும் பிரபலமாக ஓரி வலம்…
திமுகவிலிருந்து செந்தில் பாலாஜி விலகுகிறாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டு, இதனால் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சியடைந்துள்ளதாக ஒரு செய்தித் தொகுப்பு இடம் பெற்றுள்ளது.…