சத்தீஷ்கரில் அதிரடி..! 29 நக்சலைட்டுகள் துப்பாக்கிகளுடன் சரண்.. ரூ. 2 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்ட முக்கிய புள்ளி சிக்கினார்…!!

By Soundarya on தை 16, 2026

Spread the love
சத்தீஷ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகளை ஒழிக்கும் நோக்கில் மத்திய மற்றும் மாநில அரசுகள் ஒருங்கிணைந்து தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. வன்முறைப் பாதையைத் துறந்து சரணடையும் நக்சலைட்டுகளுக்கு மாநில அரசு பல்வேறு மறுவாழ்வுத் திட்டங்களைச் செயல்படுத்தி வருவதால், சமீபகாலமாக ஏராளமான நக்சலைட்டுகள் தங்களது ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு ஜனநாயகப் பாதைக்குத் திரும்பி வருகின்றனர். 
இதன் தொடர்ச்சியாக, சுக்மா மாவட்டத்தில் நக்சலைட் அமைப்பில் முக்கியப் பொறுப்புகளில் இருந்த 29 நக்சலைட்டுகள் காவல்துறையினரிடம் சரணடைந்தனர். இதில் குறிப்பிடத்தக்க அம்சமாக, காவல்துறையினரால் தேடப்பட்டு வந்தவரும், தலைக்கு 2 லட்ச ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தவருமான போடியம் புத்ரா என்பவரும் அடங்குவார். சரணடைந்த அனைவருக்கும் அரசு அறிவித்துள்ள மறுவாழ்வு உதவிகள் முறைப்படி வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.