ஏற்கனவே திருமணம் ஆகிட்டா?.. ஹோட்டல் ரூமில் பிணமான புதுப்பெண்… 3 மாசத்துல முற்றுப்பெற்ற வாழ்க்கை… வங்கி மேலாளர் செய்த வெறிச்செயல்…!!

By Gayathri on ஐப்பசி 26, 2026

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சி பகுதியிலுள்ள ஒரு தங்கும் விடுதி அறையில், திருமணமான மூன்றே மாதங்களில் முஸ்கான் சிமோலியா என்ற இளம் பெண் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக, மத்தியப் பிரதேசத்தில் வங்கி மேலாளராகப் பணிபுரிந்து வரும் அவரது கணவர் நீலேஷை காவல்துறையினர் உடனடியாகக் கைது செய்து காவலில் எடுத்துள்ளனர்.

முஸ்கானின் மரணத்திற்கு அவரது கணவரே காரணம் என உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினர் திட்டவட்டமாகப் புகார் தெரிவித்துள்ளனர். மேலும், நீலேஷ் தனக்கு ஏற்கெனவே நிகழ்ந்த முதல் திருமணத்தை மறைத்து ஏமாற்றி முஸ்கானை இரண்டாவதாகத் திருமணம் செய்துகொண்டதாகவும் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். தற்போது காவல்துறையினர் நீலேஷிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், மரணத்திற்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய பிரேதப் பரிசோதனை முடிவுகளுக்காக அதிகாரிகள் காத்திருக்கின்றனர்.