வேலியே பயிரை மேய்ந்தால் என்ன செய்வது…? எம்எல்ஏ பண்ணை வீட்டில் 25 வயது பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை… போலீசார் செய்த கொடூரம்…!!

By Devi Ramu on புரட்டாதி 25, 2026

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் அமரோஹா மாவட்டம் ஹசன்பூர் பகுதியில் உள்ள உத்தராகண்ட் மாநில எம்எல்ஏ உமேஷ் சர்மாவின் பண்ணை வீட்டில், 25 வயது பெண் ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.

இக்கொடூர சம்பவத்தில் இரண்டு சிஆர்பிஎஃப் வீரர்கள் மற்றும் இரண்டு உள்ளூர் போலிஸார் உட்பட மொத்தம் 4 காவல்துறையினர் ஈடுபட்டுள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து ஊடகங்களிடம் பேசிய எம்எல்ஏ உமேஷ் சர்மா, “மக்களைப் பாதுகாக்க வேண்டிய காவல் துறையே இவ்வாறு கொடூரர்களாக மாறினால் பொதுமக்கள் என்ன செய்ய முடியும்?” என மிகுந்த மனவேதனையுடனும் ஆத்திரத்துடனும் கேள்வி எழுப்பியுள்ளார்.

   

பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இச்சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டிற்கே பாதுகாப்பு அளிக்க வேண்டிய பாதுகாப்புப் படையினரே இத்தகைய கொடூரச் செயலில் ஈடுபட்டிருப்பது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சமூக வலைதளங்களில் கடும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.