வசாய் மேற்கில் உள்ள கிருஷ்ணா டவுன்ஷிப்பில் அமைந்துள்ள துரி காம்ப்ளக்ஸ் பகுதியில், சுமார் 20 முதல் 25 தெருநாய்கள் கூட்டமாகச் சுற்றித் திரிவதால் அப்பகுதி மக்கள் கடும் பீதியில் ஆழ்ந்துள்ளனர். இந்த நாய்களின் அச்சுறுத்தலால் குடியிருப்புவாசிகள் அன்றாடப் பணிகளுக்காக வெளியே செல்லவே அச்சப்படும் சூழல் உருவாகியுள்ளது.
கடந்த நான்கு நாட்களில் மட்டும் இந்த தெருநாய்கள் சுமார் 5 முதல் 7 பேரைத் தாக்கியுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதில் குறிப்பாகச் சிறிய குழந்தைகளும் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பது பெற்றோர் மற்றும் பொதுமக்கள் இடையே பெரும் கவலையையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
https://twitter.com/HateDetectors/status/2085974919524028715/video/1
இந்தத் தாக்குதல் சம்பவங்கள் அங்குள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளன. எனவே, அசம்பாவிதங்கள் ஏதும் அசாதாரணமாக நடக்கும் முன், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு தெருநாய்களின் அச்சுறுத்தலுக்குத் தீர்வு கண்டு, மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என அப்பகுதி வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நலசோபரா கிழக்கு பகுதியிலுள்ள ஒய்.பி. நகர் டெரஸில் கிரில் அமைப்பது தொடர்பாக இரு குடும்பத்தினரிடையே ஏற்பட்ட தகராறில் பெண் ஒருவர்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஃபரூக்காபாத் மாவட்டத்தில் முதலமைச்சர் யோகி ஆதிநாத்தின் வருகையின்போது, 9 மாதங்களுக்கு முன்பு கொல்லப்பட்ட 10 வயது…
உத்தரப்பிரதேச மாநிலம் அவுரையா மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு குடும்பத் தகராறு இணையத்தில் பெரும் வைரலாகியுள்ளது. கணவன்-மனைவிக்கிடையே ஏற்பட்ட மோதலில், மனைவி…
உத்திரப்பிரதேசம் மாநிலம், புலந்த்ஷெர் மாவட்டம் ஜஹாங்கிராபாத் பகுதியில் நாயைக் காப்பாற்ற முயன்றபோது அதிவேகமாக வந்த கார் மின் கம்பத்தின் மீது…
ஆக்ரா எக்தா காவல் நிலையப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில், 17 வயதுடைய இளம்பெண் ஒருவர் நேற்று மாலை 6:30…
கர்நாடக மாநிலம் மங்களூரு பகுதியில் ஆன்லைன் டெலிவரி செயலியான 'பிலிங்கிட்' மூலம் வாடிக்கையாளர் ஒருவர் முட்டை ஆர்டர் செய்துள்ளார். டெலிவரி…