தமிழகத்தில் திடீர் அதிரடி மாற்றம்… இரவோடு இரவாக முதலமைச்சர் விஜய்யின் ‘டாப் கியர்’ ஆக்ஷன்.. அலறும் அதிகாரிகள் வட்டம்…!

By Nanthini on ஆனி 14, 2026

Spread the love

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதலமைச்சர் விஜய் பொறுப்பேற்றதில் இருந்தே, நிர்வாகத் திறனை மேம்படுத்தும் நோக்கில் முக்கிய உயர் அதிகாரிகளின் பணியிட மாற்றங்கள் தொடர்ச்சியாக அரங்கேறி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, நேற்று ஒரே நாளில் மாநிலம் முழுவதும் 25 துணை ஆட்சியர்களை அதிரடியாக இடமாற்றம் செய்து வருவாய்த்துறை செயலாளர் பழனிச்சாமி அதிகாரப்பூர்வ உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இதேபோன்று, வருவாய்த்துறை மட்டுமன்றி டாஸ்மாக் நிர்வாகத்தின் கீழ் இயங்கி வரும் மண்டல மற்றும் மாவட்ட மேலாளர்களும் அதே அந்தஸ்தில் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். புதிய அரசின் இந்த அடுத்தடுத்த அதிரடி மாற்றங்கள், அரசுத் துறைகளின் செயல்பாடுகளை முடுக்கிவிடுவதற்கான ஒரு முக்கிய நகர்வாகவே தற்போதைய அரசியல் மற்றும் நிர்வாக வட்டாரங்களில் பார்க்கப்படுகிறது.