BREAKING: தமிழக தேர்தல்… விஜய் எடுத்த திடீர் முடிவு…!!

By Soundarya on பங்குனி 16, 2026

Spread the love

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இரண்டாம் கட்ட வேட்பாளர் நேர்காணலை நடத்துவது குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

மேலும், தமிழகம் முழுவதும் விஜய் சுமார் 25 நாட்கள் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார். இதற்கான விரிவான பயணத்திட்டம் மற்றும் பிரச்சார வியூகங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும், விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.