மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய தகவலியல் மையத்தில் (National Informatics Centre – NIC) பணிபுரிய ஒரு சிறந்த வாய்ப்பு உருவாகியுள்ளது. தகுதியான இளைஞர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 243
கல்வித்தகுதி: கணினி அறிவியல் (Computer Science), தகவல் தொழில்நுட்பம் (IT), செயற்கை நுண்ணறிவு (AI) உள்ளிட்ட தொடர்புடைய பிரிவுகளில் B.E / B.Tech முடித்திருக்க வேண்டும்.
கூடுதல் தகுதி: விண்ணப்பதாரர்கள் கட்டாயம் GATE தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 30 வயதிற்கு உட்பட்டவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
மாதச் சம்பளம்: தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு குறைந்தபட்சம் ₹56,100 முதல் அதிகபட்சம் ₹1,77,500 வரை ஊதியம் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமுள்ளவர்கள் recruitment.nic.in என்ற இணையதளத்தின் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
கடைசி தேதி: ஏப்ரல் 24, 2026-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
