கொச்சியில் உள்ள மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நேவல் ஷிப் ரிப்பேர் யார்டு (Naval Ship Repair Yard – NSRY) மற்றும் நேவல் ஏர்கிராப்ட் யார்டு (Naval Aircraft Yard – NAY) ஆகியவற்றில் 240 அப்ரண்டீஸ் (Apprentice) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஐ.டி.ஐ (ITI) முடித்த தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிட விவரங்கள்:
பணி: அப்ரண்டீஸ் (Trade Apprentice – ITI Holder)
மொத்த பணியிடங்கள்: 240
முக்கிய தொழிற் பிரிவுகள் (Trades): பிட்டர் (Fitter), கம்ப்யூட்டர் ஆபரேட்டர் (COPA), எலக்ட்ரீஷியன் (Electrician), வெல்டர் (Welder – Gas & Electric), எலக்ட்ரானிக் மெக்கானிக், மெஷினிஸ்ட், டர்னர், பெயிண்டர், பிளம்பர் மற்றும் பிற தொழில்நுட்பப் பிரிவுகள்.
கல்வித்தகுதி:
10-ம் வகுப்பு (SSLC/Matriculation) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அங்கீகரிக்கப்பட்ட தொழிற்பயிற்சி நிலையத்தில் (ITI/NCVT) தொடர்புடைய பிரிவில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களுக்கு 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். (வயது தளர்வு அரசு விதிகளின்படி பொருந்தும்).
தேர்வு முறை:
ஐ.டி.ஐ மற்றும் 10-ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் (Merit List) தகுதியானவர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவர்.
பின்னர் நேர்முகத் தேர்வு (Interview) மூலம் இறுதித் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை (Offline):
www.apprenticeshipindia.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்யவும்
