மறுவாழ்வு மையமா? மரணக் கூடாரமா?… நள்ளிரவில் கேட்ட அலறல் சத்தம்… மீட்க வந்த இடத்தில் கொடூர மரணம்… முன்னாள் நோயாளிகளே செய்த வெறிச்செயல்…!!

By Gayathri on ஐப்பசி 17, 2026

Spread the love

காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு அடுத்த சக்கரா நகரில் செயல்பட்டு வரும் தனியார் போதை மறுவாழ்வு மையத்தில், சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த நிஷாந்த் என்பவர் கடந்த நான்கு மாதங்களாகச் சிகிச்சை பெற்று வந்தார். இதே மையத்தில் முன்பு சிகிச்சை பெற்றுப் பின்னர் அங்கேயே ஊழியர்களாகப் பணியாற்றி வந்த பாபு மற்றும் சிவகுமார் ஆகியோருடன், நிஷாந்திற்கு அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நிஷாந்த் அவர்களைத் தரக்குறைவாகப் பேசியதால் இரு தரப்பிற்கும் இடையே முன்விரோதம் நீடித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், மீண்டும் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது ஆத்திரமடைந்த ஊழியர்கள் பாபு மற்றும் சிவகுமார், சமையலறையிலிருந்த கத்தியை எடுத்து வந்து நிஷாந்தின் கழுத்தில் சரமாரியாகக் குத்தினர். இதில் பலத்த காயமடைந்த நிஷாந்த், அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

   

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாங்காடு காவல்துறையினர், உயிரிழந்த நிஷாந்தின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இக்கொலைச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், தாக்குதலில் ஈடுபட்ட ஊழியர்கள் இருவரையும் உடனடியாகக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.