ரயில்வேயில் 22,000 குரூப் ‘டி’ காலிப்பணியிடங்கள்… 10th முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்…!!

By Soundarya on மார்கழி 26, 2025

Spread the love

இந்திய ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB), குரூப்-டி (நிலை-1) பிரிவில் சுமார் 22,000 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணியிடங்கள்: 22,000 (இதில் 11,000 இடங்கள் தண்டவாள பராமரிப்பாளர் – Track Maintainer Grade IV பணிக்கு ஒதுக்கப்பட்டுள்ளன).

   

கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது ITI (நேஷனல் அப்ரண்டிஸ்ஷிப் சான்றிதழ் உட்பட) முடித்திருக்க வேண்டும்.

   

வயது வரம்பு: 18 முதல் 33 வயது வரை (01.01.2026 அன்றுள்ளபடி). அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.

 

விண்ணப்பிக்கும் காலம்: ஆன்லைன் விண்ணப்பங்கள் ஜனவரி 21, 2026 முதல் தொடங்கும். விண்ணப்பிக்க கடைசி தேதி பிப்ரவரி 20, 2026 ஆகும்.

சம்பளம்: ஆரம்ப ஊதியம் ரூ.18,000 முதல் (7-வது ஊதியக் குழுவின்படி).

தேர்வு முறை: கணினி வழித் தேர்வு (CBT), உடற்தகுதித் தேர்வு (PET), சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் மருத்துவப் பரிசோதனை அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.