22 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்தின் வில்லன் திரைப்படம்.. அப்பவே இத்தனை கோடி வசூலா..?

By Nanthini on கார்த்திகை 5, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் அஜித். இவருடைய படங்கள் அனைத்துமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. படத்தில் தனது கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு நடிப்பதில் இவரை அடித்துக் கொள்ள ஆளே கிடையாது. அதன்படி அஜித் நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு நவம்பர் நான்காம் தேதி வெளியான திரைப்படம் தான் வில்லன். கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடித்திருப்பார்.

   

அஜித்துடன் மீனா, கிரன் ரத்தோட், கருணா சொல்லிட்டோர் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்றது மட்டுமல்லாமல் பிளாக் பாஸ்டர் வசூல் சாதனை செய்தது. இந்த திரைப்படம் தெலுங்கில் இதே பெயரில் ராஜசேகர் நடிப்பில் 2003 ஆம் ஆண்டு வெளியானது. 39 நாட்களில் இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பை படக்குழு முடித்திருந்தனர். வித்யாசாகர் இசையமைப்பில் இந்த படத்தில் வெளியான அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.

   

Watch Villain (2002) Full Movie Online - Plex

 

பொதுவாகவே பெரிய நடிகர்களின் படங்கள் பற்றி எந்த ஒரு விஷயம் என்றாலும் ரசிகர்கள் அதனை உன்னிப்பாக கவனிப்பார்கள். டாப் நடிகர்களின் பழைய படங்களின் ரிலீஸ் தேதி வந்துவிட்டாலே இப்போதெல்லாம் அந்த திரைப்படம் பற்றி ரசிகர்கள் அதிகம் பேசுகின்றனர். அதன்படி சுமார் 2002 வருடங்களுக்கு முன்பு நவம்பர் நான்காம் தேதி வெளியான திரைப்படம் தான் அஜித்தின் வில்லன். இந்த திரைப்படம் வெளியாகி சுமார் 2002 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் திரைப்படம் வெளியான அந்த சமயத்தில் மொத்தமாக அப்போதே சுமார் 30 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. அந்த காலத்தில் இந்த வசூல் என்பது மிகப்பெரிய சாதனைதான்.