தமிழகத்தில் 22 அரசியல் கட்சிகள் உள்பட நாடு முழுவதும் 334 கட்சிகளை நீக்கி இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கடந்த ஆறு வருடங்களாகவே எந்த தேர்தலிலும் போட்டியிடாத கட்சிகளை கண்டறிந்து அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சியாக அறிவித்துள்ளது. அதன்படி, காமராஜர் மக்கள் கட்சி, மக்கள் நீதி கட்சி, அனைத்திந்திய சமத்துவ மக்கள் கட்சி, மீனவர் மக்கள் முன்னணி உள்ளிட்டவை நீக்கப்பட்டுள்ளது.
