“நீங்க எம்.பி அல்ல முதலமைச்சராக வேண்டியவர்”.. ஐஸ் வச்சி என்னையே விலைக்கு வாங்க பார்த்தாங்க.. பரபரப்பை கிளப்பிய வைகோ..!

Spread the love

தூத்துக்குடியில் “ஸ்டெர்லைட் வெளியேற்றம்” என்ற தலைப்பில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை சுற்றியுள்ள 30 கிலோமீட்டர் தூரத்திற்கு சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலைமை நீடித்தால் விவசாயம் அழிந்து விடும். அமெரிக்காவில் ஒரு ஸ்டெர்லைட் தொழிற்சாலை தொடங்கப்பட்டு, மக்களின் எதிர்ப்பால் மூடப்பட்டது. அந்தத் தொழிற்சாலையால், விஷக்காற்று வீசி, பல நோய்களை பரப்பியது. அது மட்டுமல்லாமல் விவசாயமும் செய்ய முடியவில்லை.

1994, 1995, 1996 ஆம் ஆண்டுகளில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான உண்ணாவிரதம் போராட்டம் நடத்தி, அதில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதன் பெயரில், தொடுத்த வழக்கில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை மீறி ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்தால் ஒன்றும் செய்ய இயலவில்லை. இப்பொழுது ஸ்டெர்லைட் நிர்வாகம் மக்களை தூண்டி விட்டு, அவர்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஒரு விமான நிலையத்தில் அணில் அகர்வால் என்னை சந்தித்து, நீங்கள் எம்.பி அல்ல முதலமைச்சராக வேண்டியவர். 15 நிமிடம் எனக்கு நேரம் ஒதுக்குங்கள் ஸ்டெர்லைட் மீது தவறான புரிதல் கொண்டு உள்ளீர்கள் என, என்னை விலைக்கு வாங்க நினைத்தார். அப்பொழுது நான் எதுவாக இருந்தாலும் நீதிமன்றத்தில் சந்திக்கலாம் என்றேன். ஸ்டெர்லைட் நிர்வாகம் பலரை விலைக்கு வாங்க நினைக்கும் நிலையில், தூத்துக்குடி மக்களே அதற்கு இடம் கொடுத்து விடாதீர்கள். கடற்கரையில் இருந்து 25 கிலோ மீட்டர் தூரத்தில் தான் தொழிற்சாலைகள் அமைய வேண்டும் என்பது சட்டம். ஆனால் ஆலை  அமைக்க அன்றைய அரசு எப்படி அனுமதி அளித்தது என்று தெரியவில்லை என்றார்.

பிரதமரை சந்தித்தது பற்றி பேசுகையில், ஜாதி மத வேறுபாடுகள் இன்றி சமூக நீதியை போதித்த பெரியார், அண்ணா வழியில் வந்தவன் தான், இந்த வைகோ. தேர்தல் வருவதால் சமூக ஊடகங்களில், எமது மகன் துரை வைகோவை மத்திய அமைச்சராக்குவதற்கு, பிரதமரை சந்தித்ததாக பல பொய்களை உருவாக்குகின்றனர். ரஷ்ய நாட்டில், தமிழ்நாட்டு மருத்துவக் கல்லூரி மாணவரை உக்கிரன் போருக்கு அனுப்ப போகிறார்கள் என்ற தகவல் அறிந்து, அவரைக் காப்பாற்றவே பிரதமரை சந்தித்தேன் என்றார்.

பத்திரிக்கையில் மதிமுக கூட்டணி மாறும் என்று கூறியுள்ளவர்களின் கைகள் அழுகிப்போகும். எதையும் எதிர்பார்க்காமல் மனப்பூர்வமாக திமுகவுடன் கைகோர்த்து பணியாற்றிக் கொண்டிருக்கிறோம் என்றார்.

Srimathi

Recent Posts

“வீட்டில் மகளுடன் இருந்த தொழிலாளி…” தனியாக அழைத்து சென்று முதலாளி செய்த கொடூரம்… நெஞ்சை உலுக்கும் பயங்கர சம்பவம்…!!

பெங்களூரு யெலஹங்கா பகுதியில், தனது மகளுடன் பழகியதாகக் கூறி கேரளாவைச் சேர்ந்த 22 வயது தொழிலாளியை அவரது முதலாளியே அடித்துக்…

57 seconds ago

ஐயோ கொடுமையே… காதல் திருமணம் சோகத்தில் முடிந்த விபரீதம்… மனைவியை அடித்துக் கொன்று தப்பிய கணவனின் கொடூரம்… உ . பி – யில் அரங்கேறிய பகீர் சம்பவம்…!

உத்தரப் பிரதேச மாநிலம் பராபங்கியைச் சேர்ந்த சந்தீப் வர்மா என்பவரும் ரீமா வர்மா (30) என்பவரும் காதலித்து திருமணம் செய்து…

1 minute ago

ஏங்க எழுந்திரிங்க… நாம வீட்டுக்குப் போயிடலாம்… விபத்தில் இறந்த கணவனின் உடலைப் பிடித்து கதறிய மனைவி… திருவாரூரில் நடந்த சோகம்…!

திருவாரூர் வடம்போக்கி பகுதியைச் சேர்ந்தவர் சங்கர்ராமன் (73). இவர் அங்குள்ள தெட்சிணாமூர்த்தி மடத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், தியாகராஜர் கோயில்…

15 minutes ago

அட கொடுமையே… பட்டாசு வெடித்தால் நிரந்தர பார்வை இழப்பு?… மருத்துவர்கள் விடுக்கும் அதிரடி எச்சரிக்கை… மும்பையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

தீபாவளி பண்டிகையின் போது பட்டாசுகளை வெடிக்கும்போது ஏற்படும் விபத்துகளால் கடுமையான தீக்காயங்கள் மற்றும் நிரந்தர பார்வை இழப்பு ஏற்படக்கூடும் என்று…

33 minutes ago

திக் திக்… மகளுடன் தனியாக இருந்த ஊழியர்… ஆத்திரத்தில் முதலாளி செய்த பகீர் காரியம்… பெங்களூரில் அரங்கேறிய கொடூர சம்பவம்…!

பெங்களூரில் நிகழ்ந்த ஒரு கோரச் சம்பவத்தில், தன் உற்பத்திப் பிரிவில் பணிபுரியும் கிரண் என்பவரை, தன் மகளுடன் வீட்டில் தனித்திருந்த…

36 minutes ago