“தவெக 3.0, 2026-ல் கோட்டை நமதே”… காலையிலேயே விஜய் வெளியிட்ட எமோஷனல் ட்வீட்… அதிரப்போகும் தமிழக அரசியல் களம்….!

Spread the love

தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்டு இன்றுடன் (பிப்ரவரி 2, 2026) வெற்றிகரமாக இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்து மூன்றாம் ஆண்டு தொடங்குகிறது. இதனை முன்னிட்டு அக்கட்சியின் தலைவர் விஜய், தனது தொண்டர்களுக்கும் தமிழக மக்களுக்கும் நெகிழ்ச்சியான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளில் மக்கள் இயக்கமாகத் தடம் பதித்த தவெக, தற்போது ஒரு முழுமையான அரசியல் சக்தியாக உருவெடுத்துள்ளதை அவர் பெருமிதத்துடன் சுட்டிக்காட்டியுள்ளார்.

விஜய் தனது அறிக்கையில், “தமிழக வெற்றிக் கழகம் என்பது சலனங்களால் அசைக்க முடியாத ஆழ்கடல் போன்றது” என்று குறிப்பிட்டுள்ளார். 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை நோக்கிய பயணத்தில், தமிழகத்தில் இதுவரை இல்லாத ஒரு புதிய அரசியல் சூழல் உருவாகியுள்ளதாகவும், அதற்கு தவெக-வின் வருகையே முக்கியக் காரணம் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். எவராலும் புறக்கணிக்க முடியாத ஒரு விரிவானமாக கட்சி வளர்ந்து நிற்பதை அவர் தனது பதிவில் உறுதிபடக் கூறியுள்ளார்.

தேர்தல் களத்தில் வெறும் பங்கெடுப்பது மட்டுமே தவெக-வின் நோக்கமல்ல, மாறாக ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதே இறுதி இலக்கு என்பதை விஜய் தெளிவுபடுத்தியுள்ளார். “தேர்ந்த தெளிவுடனும், திறன்மிக்க நுட்பத்துடனும் தேர்தல் களத்தை அணுகுவோம்” என்று கூறியுள்ள அவர், சாமானிய மக்களுக்கான அதிகார அரசியல் வெற்றியை நோக்கிய பயணத்தில் தொண்டர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டுமென அழைப்பு விடுத்துள்ளார்.

இறுதியாக, 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் அளிக்கப்போகும் அமோக ஆதரவுடன், ஜனநாயக முறையில் ஆட்சி பீடத்தைக் கைப்பற்றுவது உறுதி என்று விஜய் சூளுரைத்துள்ளார். கட்சியின் மூன்றாம் ஆண்டு தொடக்கத்தைக் கொண்டாடும் விதமாக, தமிழகம் முழுவதும் தவெக தொண்டர்கள் உற்சாகத்துடன் பல்வேறு மக்கள் நலப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இது தமிழக அரசியல் களத்தில் தவெக ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக வளர்ந்துள்ளதைக் காட்டுகிறது.

Nanthini

Recent Posts

“ஈரான் கப்பலில்.. ஆபத்தான கெமிக்கல்”… ஓமன் கடலில் நடந்த அந்த ஒரு சம்பவம்…. உலகையே உலுக்கும் பகீர் பின்னணி…!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…

11 மணத்தியாலங்கள் ago

சீனாவின் மிரட்டலுக்கு ஜப்பானின் பதிலடி?… உலக நாடுகள் அதிர்ச்சி.. இரண்டாம் உலக போருக்கு பின் ஆயுத ஏற்றுமதி…!

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…

11 மணத்தியாலங்கள் ago

“15 ஆண்டு காலப் போராட்டம்… விட்றாதீங்க காரைக்குடி மக்களே”… சீமானுக்காக உருகிய ஆர்.கே. சுரேஷ்.. அரசியலில் அதிரடி திருப்பம்…!

காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…

11 மணத்தியாலங்கள் ago

“விஜய்யை வம்புக்கு இழுத்த ஜூலி… வனிதா கேட்ட ஒற்றை கேள்வி”… வாயடைத்துப் போன நெட்டிசன்கள்….!

நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…

11 மணத்தியாலங்கள் ago

“சுக்கிர திசை… ராகு புத்தி”… மூன்றரை கோடி வாக்குகள்… திமுகவை கடைசி நேரத்தில் அலறவிடும் விஜய்… ரகசியத்தை உடைத்த ஜோதிடர் ராதன் பண்டிட்…!

தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…

11 மணத்தியாலங்கள் ago

“பதவிக்காக வரவில்லை”… கண்கலங்கிய அமைச்சர் பி.டி.ஆர்… மதுரையை நெகிழ வைத்த உருக்கமான பேச்சு….!

மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…

11 மணத்தியாலங்கள் ago